ETV Bharat / city

திரையரங்குகளை விரைவில் திறக்க முதலமைச்சர் உறுதி - உரிமையாளர்கள் சங்கம் - எடப்பாடி பழனிசாமி

சென்னை: தமிழ்நாட்டில் விரைவில் திரையரங்குகளை திறக்க வேண்டும் என முதலமைச்சரை நேரில் சந்தித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

theatres
theatres
author img

By

Published : Oct 20, 2020, 1:39 PM IST

Updated : Oct 20, 2020, 1:51 PM IST

முதலமைச்சரின் தாயார் தவுசாயம்மாள் மறைவுக்கு முதலமைச்சரை நேரில் சந்தித்து பல்வேறு தரப்பினரும் ஆறுதல் கூறி வருகின்றனர். தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பிலும் முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததோடு, கோரிக்கை மனுவும் அளித்தனர்.

அதில், ” ஊரடங்கால் திரையரங்குகளின் ஆவணங்களை புதுப்பிக்க முடியாததால், தானியங்கி முறையில் உரிமங்களை புதிப்பிக்க ஆணை வழங்க வேண்டும். தினசரி 4 காட்சிகள் என்ற முறையை மாற்றி, காலை 8 மணி முதல் இரவு 2 மணி வரை காட்சிகளை வைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும். புதுச்சேரி மாநிலம் போல் தமிழ்நாட்டிலும் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும் ” எனக் கோரப்பட்டுள்ளது.

திரையரங்குகளை விரைவில் திறக்க முதலமைச்சர் உறுதி - உரிமையாளர்கள் சங்கம்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் ’ரோகிணி’ பன்னீர்செல்வம், “ கடந்த ஏழு மாதங்களாக திரையரங்குகள் மூடியிருப்பதால் மிகுந்த வேதனையும் பெரும் இழப்பும் ஏற்பட்டுள்ளது. விரைவில் திரையரங்குகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் உறுதியளித்துள்ளார் “ என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அச்சங்கத்தின் நிர்வாகி அபிராமி ராமநாதன், மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசித்து விரைவில் திரையரங்குகள் திறப்பு குறித்து அறிவிக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்ததாக கூறினார்.

இதையும் படிங்க: விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல்: சமூக வலைதளத்தில் எழும் கண்டனங்கள்!

Last Updated : Oct 20, 2020, 1:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.