ETV Bharat / city

சீன கடன் செயலி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம் - LatestTamilnadu updates

சீன கடன் செயலி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

author img

By

Published : Jan 21, 2021, 1:46 PM IST

Updated : Jan 21, 2021, 7:56 PM IST

13:41 January 21

ஆன்லைன் கந்துவட்டி கடன் செயலி வழக்கில், சீனமோசடி கும்பல் தொடர்பாக விசாரிக்க இன்டர்போல் உதவியை நாட உள்ளதால் தமிழ்நாடு சிபிசிஐடி பிரிவுக்கு வழக்கை மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக இரண்டு சீனர்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். 

வீட்டிலிருந்தபடியே செல்போன்கள் மூலமாகவே வேண்டிய கடன் தொகையை பெற்றுக் கொள்ளும் வகையில் பல செல்போன் செயலிகளை சீன மோசடி கும்பல் உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் பொதுமக்களிடம் வட்டிக்கு கடன் வழங்கி, அசல் தொகையைவிட பல மடங்கு மிரட்டிப் பணம் பறிக்கும் செயலை, இந்த ஆன்லைன் கந்து வட்டி கும்பல் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கும்பலைச் சேர்ந்த இரண்டு சீன நாட்டினர் உட்பட 8 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். 

இந்த வழக்கில் கைதான சீனர்களை காவலில் எடுத்து விசாரித்ததில், மூளையாக செயல்பட்ட முக்கிய நபரான ஹாங்க் சீனா தப்பிச் சென்றது தெரியவந்தது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய சீன கும்பல் சீனா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பதுங்கியிருப்பதால் அவர்களைப் பிடிக்க இன்டர்போல் உதவியை நாட வேண்டியுள்ளது. தமிழ்நாடு காவல் துறையில் சிபிசிஐடி-யில் தான் பொறுப்பு அலுவலர் இருப்பார். அது மட்டுமில்லாமல், வெளிநாட்டு பணப்பரிவர்த்தனை தொடர்பு இருப்பதாலும், 5 மாநிலங்களில் உள்ள பொதுமக்கள் இந்த மோசடியில் பாதிக்கப்பட்டிருப்பதாலும் மாநில புலனாய்வு அமைப்பான சிபிசிஐடிக்கு மாற்ற முடிவெடுக்கப்பட்டது. வெவ்வேறு மாநிலங்களிலும், தேவைப்பட்டால் சிபிஐ மூலம் மற்ற நாட்டு இன்டர்போல் உதவியைப் பெற முடியும் என்பதால் சிபிசிஐடி-க்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுவரை மத்திய குற்றப்பிரிவு  காவல் துறை விசாரணை செய்ததில், 10 பேமண்ட் கேட்வே வழியாகப் பணமானது wazirx என்ற நிறுவனம் மூலம் கிரிப்டோகரன்சியாக சிங்கப்பூர் மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கு பரிவர்த்தனை நடந்திருப்பதாக கண்டுபிடித்துள்ளனர்.(*பேமண்ட் கேட்வே - ஒருவரிடமிருந்து  ஆன்லைன் மூலம் அனுப்பப்படும் பணம் பேமண்ட் கேட்வே என்னும் இயங்குதளம் வழியாக உரியவரை சென்றடையும்) 

இந்த விவகாரத்தில் கிரிப்டோகரன்சியாக மாற்றப்பட்ட பணம் சிங்கப்பூரில் ஹூ ஷுங் என்ற சீனர் வங்கிக் கணக்கிற்கு சென்றதை கண்டுபிடித்துள்ளனர். மேலும் சிம் கார்டுகளை தொடர்ந்து வெளிநாட்டிலிருந்து ஷுங்க்ளியான் என்ற மற்றொரு சீனர் இயக்கி வருவதாகவும் தெரிய வந்துள்ளது. ஏற்கெனவே மூளையாக செயல்பட்ட ஹாங்க் என்ற சீனரை பிடிக்க லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்த நிலையில், தற்போது தொடர்புடைய ஹூ ஷுங் மற்றும் ஷுங்ளியான் என்ற இரண்டு சீனர்களுக்கும் மத்திய குற்றப்பிரிவுப் போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். 

பேமண்ட் கேட்வே வழியாக, wazrix என்ற நிறுவனம் ஆர்பிஐ-க்கு தெரியாமல் எவ்வாறு வெளிநாட்டுக்கு கிரிப்டோகரன்சியாக மாற்றி அனுப்பினார்கள் என்பதை அறிந்து கொள்ள ஆர்பிஐ-க்கு விளக்கம் கேட்டு மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

தற்போது ரேஷர்பே பேமண்ட் கேட்வே மூலமாக ஒன்றரை கோடி ரூபாய் அளவு பிட் காயின்கள் மாற்றப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும்,மீதமுள்ள கேட்வே மூலம் எவ்வளவு பணம் பிட்காயின்களாக மாற்றி அனுப்பப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த விசாரணையில் ரேஷர்பே பேமண்ட் கேட்வே நிறுவனம், பல செயலிகள் இதேபோன்று சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை செய்திருப்பதாக கண்டறிந்துள்ளனர். சுமார் 100க்கும் மேற்பட்ட செயலிகள் காவல் துறை நடவடிக்கையால் தடை செய்யப்பட்டிருப்பதால்,ரேஷர்பே மூலம் 2000 கோடி ரூபாய் வரை வெளிநாட்டு வர்த்தகம் நின்றுள்ளதாக காவல் துறையிடம் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து மற்ற பேமண்ட் கேட்வே நிறுவனங்களையும் விசாரணைக்குட்படுத்தினால் பல சட்டவிரோதப் பரிவர்த்தனைகள் சிக்கும் என காவல் துறை தெரிவித்துள்ளனர்.

விரைவில் வழக்கு ஆவணங்களை சிபிசிஐடி அதிகாரிகள் பெற்று, ஐந்து மாநில காவல் துறையிடம் ஒருங்கிணைந்து விசாரணையைத் தொடங்குவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உயிர் பறிக்கும் கடன் செயலிகள்!

Last Updated : Jan 21, 2021, 7:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.