சென்னை அண்ணாநகர் சத்தியசாய் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் எழிலரசன். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் எழிலரசனுக்கு திருமணமாகி சௌமியா என்ற மனைவியும், 3.5 வயதில் தேஜி என்ற குழந்தையும் உள்ளனர்.
நேற்று மதியம் சௌமியா குழந்தை தேஜ்க்கு பால் கொடுத்து தூங்க வைத்துள்ளார். பின்னர் சௌமியா வழக்கம் போல வீட்டு வேலை செய்து முடித்து விட்டு மாலை குழந்தையை வந்து பார்க்கும் போது மெத்தையில் குழந்தை அசைவின்றி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே குழந்தை தேஜ்சை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று காண்பித்த போது மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
பின்னர் மருத்துவமனை அளித்த தகவலின் பேரில் அண்ணாநகர் போலீசார் குழந்தை சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் சௌமியா குழந்தைக்கு பால் கொடுத்து தூங்க வைத்து விட்டு சென்ற பின்னர் குழந்தை தேஜ் மூச்சுதிணறல் ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. இருப்பினும் குழந்தையின் பிரேத பரிசோதனைக்கு பின்னரே குழந்தை இறப்பிற்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: குற்றவாளிகளுக்கு பிணை வழங்கக்கூடாது - கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார்