சென்னை : இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், 27.11.2020 அன்று பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் கரோனா வைரஸ் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெறவிருந்தது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் மற்றும் கனமழை காரணமாக 27.11.2020 அன்று நடைபெறவிருந்த ஆய்வுக் கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது.
முதலமைச்சர் தலைமையில் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் கரோனா வைரஸ் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நிவர் புயல்: ரிப்பன் மாளிகையில் 24 X7 இயங்கும் கட்டுப்பாட்டு அறை - எஸ்.பி.வேலுமணி