சென்னை: போக்குவரத்து மற்றும் தொழில்நுட்பத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்றது. இது குறித்து அரசின் போக்குவரத்துத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் கூறியிருப்பதாவது, “விபத்தின்றி பணிபுரியும் அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர்களை ஊக்குவிக்கும்பொருட்டு முதலமைச்சரின் விருதுகள் வழங்கி ஊக்கப்படுத்தப்படும்.
சாலை விபத்துகள் ஏற்படுத்தும் காரணிகளான பேருந்துகளின் பகுதிகள், சாலை விபத்து ஏற்பட்ட நேரம், சாலை விபத்து அடிக்கடி ஏற்படும் மாதங்கள், சாலையைப் பயன்படுத்துவோரின் பிரிவுகள், பாலினம், வயது, ஓட்டுநர்களின் விபத்து வரலாறு, அவரது கண்பார்வை பரிசோதனைகள் கண்காணிக்கப்படவுள்ளன.
தொடர்ந்து ஓட்டுநர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுவதன் மூலம் விபத்துகளைக் குறைத்து இறுதியில் அதனை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை - ஓபிஎஸ்க்கு அமைச்சர் பதில்