ETV Bharat / city

மஞ்சப்பை சுற்றுச்சூழலை காப்பவரின் அடையாளம் - ஸ்டாலின்

மஞ்சப்பை அவமானம் அல்ல; சுற்றுச்சூழலைக் காப்பவரின் அடையாளம், இயற்கையைப் பாதிக்கும் நெகிழிப் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின்
author img

By

Published : Dec 23, 2021, 3:50 PM IST

சென்னை: நெகிழிப் பொருள்களுக்கு எதிரான மஞ்சப்பை இயக்கம், அதற்கு மாற்றான பொருள்கள் குறித்த கண்காட்சியை சென்னை கலைவாணர் அரங்கத்தில் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தார். தொடர்ந்து மஞ்சப்பை தொடர்பான குறும்படத்தையும் வெளியிட்டார்.

இந்நிகழ்வில் சுற்றுச்சூழல், விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், சுற்றுச்சூழல் - விளையாட்டுத் துறை முதன்மைச் செயலர் சுப்ரியசாஹு, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் உதயன், ஜெர்மன், பிரிட்டிஸ் தூதரக அலுவலர்கள் காரின் கிரிஸ்டினா, மரியா ஸ்டோன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மஞ்சப்பை விழிப்புணர்வு

அப்போது அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில், “முதலமைச்சர் ஸ்டாலின், இந்தியாவிற்கே வழிகாட்டியாக அமைந்து எதிர்காலச் சுற்றுச்சூழலைக் காத்துவருகிறார். இயற்கையை மீட்டெடுக்கும் செயலைச் செய்துவருகிறார். நெகிழியால் ஏற்படும் பதிப்புகள் கடந்த 30 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றம் மட்டுமே நெகிழியைத் தவிர்க்க வேண்டிய முக்கிய காலக்கட்டத்தில் நாம் உள்ளோம்.

உலகை விட்டு நெகிழியை அப்புறப்படுத்துவதற்கான தாரக மந்திரத்தின் தொடக்கமே இந்த மீண்டும் மஞ்சப்பை இயக்கம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டிலுள்ள ஏதேனும் ஒரு ஆற்றை முழுமையாகச் சுத்தப்படுத்தி அதனை நெகிழி இல்லாத இடமாக மாற்றுவதே நமது முதலமைச்சரின் தலையாய கடமையாக உள்ளது" என்றார்.

மாணவர்களுக்கு மஞ்சப்பை வழங்கிய முதலமைச்சர்

அதன்பின்னர் முதலமைச்சர் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கத்திற்கான விழிப்புணர்வு குறும்படத்தினை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கும், சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்கும், வனச்சரகர்களுக்கும் முதலமைச்சர் மஞ்சப்பைகளை வழங்கினார்.

மஞ்சப்பை அவமானம் அல்ல

அப்போது பேசிய முதலமைச்சர், “மஞ்சப்பைகள்தான் சுற்றுச்சூழலுக்குச் சரியானது. விதவிதமான நெகிழிப் பைகள் சுற்றுச்சூழலுக்குப் பெரும் கேடு. சுற்றுச்சூழல் கேடு மனிதகுலத்தை மீளா துயரத்திற்கு ஆளாக்கும். சுற்றுச்சூழல் கேடு மானுடத்தின் மாபெரும் பிரச்சினை.

ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பயன்பாட்டால் சுற்றுச்சூழலுக்குப் பெரும் ஆபத்து. நெகிழிப் பயன்பாட்டால் கால்நடை கடல் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. இயற்கையைக் கெடுக்கும் நெகிழிப் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க வேண்டும். அதனை மக்கள் தவிர்க்க வேண்டும்.

சுற்றுச்சூழலைக் காக்கும் மஞ்சப்பை

விதிமீறி நெகிழிப் பொருள்களை உற்பத்திசெய்த 130 தொழிற்சாலைக்கு மின் இணைப்புத் துண்டிக்கப்பட்டது. 14 வகையான நெகிழிப் பொருள்களுக்குத் தமிழ்நாடு அரசு தடைவிதித்துள்ளது. மஞ்சப்பை அவமானம் அல்ல; சுற்றுச்சூழலை காப்பவரின் அடையாளம்” என்றார்.

இதையும் படிங்க: கருணாநிதியின் நெருங்கிய நண்பர் கவுண்டம்பட்டி முத்து காலமானார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.