ETV Bharat / city

உறுப்பு தானத்தில் 6 ஆவது முறையாக தமிழகம் முதலிடம்! - chief minister palanisamy thanks to doctors for got india's first place in organ donation for sixth time

சென்னை: உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மையான மாநிலமாக தேர்வு செய்யப்பட்டுள்ளதற்காக மருத்துவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

thanks
thanks
author img

By

Published : Nov 28, 2020, 1:30 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ” நேற்று நடைபெற்ற 11 ஆவது இந்திய உடல் உறுப்பு தான தின விழாவில், உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக தேர்வு செய்யப்பட்டு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் விருது வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது நாம் தொடர்ந்து 6 ஆவது முறையாக பெறுவதாகும்.

உடல் உறுப்பு தானத்தில் மட்டுமல்லாமல், சுகாதாரத் துறையிலும் தலைசிறந்து முன்னோடி மாநிலமாகவும், மற்ற மாநிலங்கள் பின்பற்றக்கூடிய வகையிலும் செயல்படுகிறது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருப்பது, மருத்துவச் சேவையில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் இதர மருத்துவ பணியாளர்களுக்கு உற்சாகம் அளிப்பதாக உள்ளது.

ஏழை எளிய மக்களுக்கு கட்டணமில்லாமல் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இச்சிகிச்சைக்காக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக 25 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. மேலும், உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு தேவைப்படும் உயரிய நோய் எதிர்ப்பு தடுப்பு மருந்துகள் எவ்வித கட்டணமும் இல்லாமல் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இதுவரை 1,392 கொடையாளர்களிடமிருந்து 8,245 உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன.

உறுப்பு தானத்தில் 6 ஆவது முறையாக தமிழகம் முதலிடம்!

தமிழ்நாட்டில் தொற்று காலத்திலும் சிறப்பு நெறிமுறைகளை உருவாக்கி, 97 உடலுறுப்புகளை 27 உறுப்பு கொடையாளிகளிடமிருந்து பெற்று, தடையின்றி உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு சாதனை படைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இவ்விருதினை பெறுவதற்கு உறுதுணையாக இருந்த அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்கும், அனைத்து மருத்துவ பணியாளர்களுக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் “ என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அதிகபட்ச கரோனா தொற்றை பதிவுசெய்யும் ஹைடெக் அண்ணா நகர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.