ETV Bharat / city

ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறப்பு!

சென்னை: காவேரி டெல்டா குறுவை நெல் சாகுபடிக்காக ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

dam
dam
author img

By

Published : May 18, 2020, 3:42 PM IST

Updated : May 18, 2020, 3:54 PM IST

டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி செய்வதற்காக, மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பது குறித்து தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில், மேட்டூர் அணையிலிருந்து குறுவை நெல் சாகுபடிக்கென வரும் ஜூன் மாதம் 12 ஆம் தேதி நீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தற்போதைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம்

100.01 அடியாகவும், நீர் இருப்பு 64.85 டிஎம்சியாகவும் உள்ளது. இது, 50 நாள்கள்வரை பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட போதுமான அளவு நீர் ஆகும். மேலும், மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரினை உழவர்கள் திறன்பட பயன்படுத்தி அதிக மகசூல் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில், கீழ்க்கண்ட அறிவுரைகளையும் துறை அலுவலர்களுக்கு அரசு வழங்கியுள்ளது. அதன்படி,

  • டெல்டா பகுதிகளில் 12 மணி நேர தடையில்லா மும்முனை மின்சாரம் கிடைக்க மின்சாரத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • பொதுப்பணித்துறையின் மூலம் A & B பாசன வாய்க்கால்களும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் மூலம் C & D பாசன வாய்க்கால்களும் விரைவாக தூர்வாரப்பட வேண்டும்.
  • குறுவை சாகுபடிக்கு ஏற்ற குறுகிய கால நெல் ரக விதைகளை தேவையான அளவு இருப்பில் வைத்து விவசாயிகளுக்கு விநியோகிக்க வேண்டும்.
  • நெல் சாகுபடிக்கு தேவைப்படும் நடவு இயந்திரங்கள், டிராக்டர்கள், சுழற்கலப்பைகள், உழவு இயந்திரங்கள் போன்ற வேளாண் இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும்.
  • நெல் சாகுபடிக்கு தேவைப்படும் ரசாயன உரங்களை போதுமான அளவு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களிலும், தனியார் உர விற்பனை மையங்களிலும் இருப்பில் வைக்க வேண்டும்.
  • கிணற்று நீர் வசதியுள்ள விவசாயிகள் ஜுன் 12 ஆம் தேதிக்குள் நற்று விட்டு, நடவுப் பணியினை முடிக்க வேளாண் துறை அலுவலர்கள் விவசாயிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.
  • அதிக மகசூல் தரும் தொழில்நுட்பங்களான திருந்திய நெல் சாகுபடி மற்றும் இயந்திர நடவு முறையினை விவசாயிகளிடையே பிரபலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • குறுவை நெல் சாகுபடி பணியை மேற்கொள்வதற்கு தேவையான பயிர்க்கடன் வசதி பெறுவதற்கு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வட்டியில்லாக் கடன் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
  • கரோனா தொற்று காரணமாக, விவசாயிகளும், தொழிலாளர்களும் முகக்கவசம் அணிந்து, தகுந்த இடைவெளியினை பின்பற்றி சாகுபடிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மேட்டூர் அணை திறப்பு குறித்து முதலமைச்சர் ஆய்வு!

மேட்டூர் அணை திறப்பின் மூலம் நடப்பாண்டில் 3.25 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு, சுமார் 5.60 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மகசூல் ஆகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: மத்திய அரசின் முடிவை எதிர்த்து பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

Last Updated : May 18, 2020, 3:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.