ETV Bharat / city

336 கோடியில் திருப்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி: முதலமைச்சர் அடிக்கல்! - மருத்துவக் கல்லூரி

சென்னை: 336 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருப்பூரில் புதிதாக அமையவுள்ள, அரசு மருத்துவக் கல்லூரி கட்டடங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.

innaguarates
innaguarates
author img

By

Published : May 18, 2020, 1:58 PM IST

தமிழ்நாடு அரசு, மருத்துவக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் படிப்படியாக அரசு மருத்துவக் கல்லூரிகளை ஏற்படுத்திவருகிறது. அந்த வகையில், கடந்த மூன்று ஆண்டுகளில் 2017-18ஆம் கல்வியாண்டில் புதுக்கோட்டையிலும் 2019-20 ஆம் கல்வியாண்டில் கரூரிலும் தலா 150 மாணவர்கள் சேர்க்கையுடன் அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செயல்பட்டுவந்த ஐ.ஆர்.டி. மருத்துவக் கல்லூரியானது 2019-20ஆம் கல்வியாண்டு முதல் அரசு மருத்துவக் கல்லூரியாகச் செயல்பட்டுவருகிறது.

மேலும், மத்திய அரசின் நிதியுதவியுடன் 2019ஆம் ஆண்டில் ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், நாமக்கல், நீலகிரி, நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை தொடங்க தமிழ்நாடு அரசு மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்றுள்ளது.

இதனைத்தொடர்ந்து, தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிராமத்தில் 336 கோடியே 96 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்படவுள்ள திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

சுமார் 11.28.0 ஹெக்டேர் நிலப்பரப்பில் 150 மாணவர்கள் சேர்க்கையுடன் புதிய திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி அமைய உள்ளது. இம்மருத்துவக் கல்லூரியை நிறுவிட, மத்திய அரசு 60 விழுக்காடு பங்களிப்பாக 195 கோடி ரூபாயையும், எஞ்சிய நிதியை தமிழ்நாடு அரசும் வழங்கும்.

336 கோடியில் திருப்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி - முதலமைச்சர் அடிக்கல்!

இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், தலைமைச் செயலர் சண்முகம், அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும்! - ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.