இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ” மாநிலம் முழுவதும், கரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக தனிமைப்படுத்தலை உறுதி செய்ய கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து, பொதுமக்களின் சிரமங்களை குறைப்பதற்காக பல்வேறு தரப்பினருக்கும் கரோனா சிறப்பு நிவாரண உதவி வழங்கப்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள 1,778 தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் பணிபுரியும், தொழிலாளர் ஈட்டுறுதித் திட்டத்தின் (E.S.I.) கீழ் பதிவு பெற்ற சுமார் 21,770 தொழிலாளர்களுக்கு தலா 1,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். இதற்காக 2.177 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது “ எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 5 மாநகராட்சிகளில் முழு அடைப்பு: குறைந்த பணியாளர்களுடன் வங்கிகள் செயல்படும்