சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான சங்கரய்யா, இன்று (ஜூலை.15) தனது 100ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.
நேரில் சென்று வாழ்த்திய முதலமைச்சர்
இதனையொட்டி பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள் குரோம்பேட்டை பகுதியில் உள்ள சங்கரய்யாவின் வீட்டிற்குச் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சங்கரய்யாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவருடன் கட்சி முக்கிய நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: 'டெல்லி புறப்பட்டு சென்ற நீா்வளத்துறை அமைச்சர்'