ETV Bharat / city

மேட்டூர் அணையில் தண்ணீரை திறந்துவைத்தார் முதலமைச்சர் - மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மே.24) திறந்து வைத்தார்.

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு

author img

By

Published : May 24, 2022, 1:48 PM IST

Updated : May 24, 2022, 3:38 PM IST

சேலம்: மேட்டூர் அணையில் ஜூன் 12ஆம் தேதிக்கு முன்னதாக தண்ணீர் திறப்பதால் சுமார் 4 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற உள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

மேட்டூர் அணையில் இன்று (மே 24) காலை நிலவரப்படி, நீர்மட்டம் 117 அடியாக உயர்ந்தது. பின்னர், அணைக்கு 10 ஆயிரத்து 508 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. குடிநீர் தேவைக்காக தற்போது வினாடிக்கு ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் கொள்ளளவு 89.94 டிஎம்சி ஆகும். தற்போது, அணை முழு கொள்ளளவை எட்டியதால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

மேட்டூர் அணையில் தண்ணீரை திறந்துவைத்தார் முதலமைச்சர்

இந்நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை மேட்டூர் அணை பகுதிக்கு வந்து, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்து, அணையின் மேல் பகுதியிலிருந்து மலர்தூவினார். பின்னர் முதலமைச்சர் அணைப்பகுதியில் இருந்த விவசாயிகளை சந்தித்து அவர்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

தற்போது முதற்கட்டமாக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் மேட்டூர் அணையில் இருந்து வலது கரையில் உள்ள எட்டு கண் மதகு மூலம் வெளியேற்றப்படுகிறது. அதன்பிறகு, சுரங்க மின்நிலையம் வழியே வெளியேற்றப்படும்.

மேட்டூர் அணை 89ஆவது முறையாக திறக்கப்பட்டுள்ளது. வழக்கமாக, மேட்டூர் அணையில் ஜூன் மாதம் 12ஆம் தேதி குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும். ஆனால் தற்போது முன்னதாகவே அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. குறுவை சாகுபடிக்கு மொத்தம் 230 நாட்கள் தண்ணீர் திறந்துவிடப்படள்ளது.

310 டிஎம்சி முதல் 360 டிஎம்சி வரை தண்ணீர் திறந்து விடப்படும் என பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். தற்போது திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் கடைமடைக்கு 10 முதல் 15 நாள்களுக்குள் சென்றுவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதங்களில் 12ஆம் தேதிக்கு முன்னதாக இதுவரை 10 முறை தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இப்போது 11ஆவது முறையாக திறக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதங்களில் 12ஆம் தேதி மட்டும் 18 முறை தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர்,
பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 4 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும் என பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது முன்னதாகவே மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் இந்தாண்டு குறுவை சாகுபடி மேலும் அதிகரிக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: மேட்டூர் அணை நீர் வீணாகாமல் தடுக்க அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை!

Last Updated : May 24, 2022, 3:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.