ETV Bharat / city

உழவர் கடன் அட்டைகள் - வங்கிகளுக்கு முதலமைச்சர் வேண்டுகோள்!

சென்னை: விவசாயக் கடன்களை வங்கிகள் உடனுக்குடன் வழங்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

meet
meet
author img

By

Published : May 30, 2020, 5:47 PM IST

தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், ’Annual Credit Plan - Tamil Nadu State 2020-21’ எனும் புத்தகத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார். கூட்டத்தில் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்குவது, சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வசதி, சுய உதவி குழுக்களுக்கு வங்கி மூலம் மானியத்துடன் கடனுதவி, 2020-21 ஆம் நிதியாண்டிற்கு கடன் திட்டம் போன்றவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

அப்போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கு வங்கிகளின் ஒத்துழைப்பு அவசியமான ஒன்றாகும். விவசாயிகளுக்கான கடனுதவியை வங்கிகள் உடனடியாக வழங்க வேண்டும்.

சிறு-குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் கடனை வங்கிகள் வழங்க வேண்டும். வங்கிகள் சிறப்பு முகாம்களை அமைத்து உழவர் கடன் அட்டைகளை விரைந்து வழங்க வேண்டும்.

மத்திய அரசின் கூடுதல் கடனுதவி கிடைக்க வங்கிகள் உதவிட வேண்டும். மூன்று மாதங்களுக்கு 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு ஊதியத்தை வீடுகளுக்கே சென்று வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது“ என்று கூறினார்.

இக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எம்.சி.சம்பத், துரைக்கண்ணு, பென்ஜமின், தலைமைச் செயலாளர் சண்முகம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நிர்வாக இயக்குநர் கர்ணம் சேகர், இந்தியன் வங்கி நிர்வாக இயக்குநர் பத்மஜா சந்துரு, ரிசர்வ் வங்கி மண்டல இயக்குநர் எஸ்.என்.எம். சுவாமி, நபார்டு வங்கி பொது மேலாளர் பத்மா ரகுநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: கரோனா தொற்றிற்கான விரிவான வழிகாட்டுதல் புத்தகம் வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.