ETV Bharat / city

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதலமைச்சர் - வேலை வாய்ப்பு

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணை வழங்கினார்.

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் பணி நியமன ஆணை  ஆசிரியர் தேர்வு வாரியம்  Chief Minister appointment order  appointment order for post graduate teachers  Teacher Selection Board  முதலமைச்சர் மு க ஸ்டாலின்  Chief Minister Stalin  வேலை வாய்ப்பு  job opportunity
பணி நியமன
author img

By

Published : Oct 13, 2022, 4:29 PM IST

சென்னை: பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டியெழுத்து தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் தகுதி பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்வதற்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு, பள்ளிக்கல்வித்துறையில் நியமிக்கப்பட உள்ளனர்.

சென்னை, கலைவாணர் அரங்கத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினி பயிற்றுநர் நிலை-1 ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 2849 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு வழங்கப்பட்டது.

அதன்பின், பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான பணியாளர்களின் 269 வாரிசுதாரர்களுக்கு இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கும், பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

இதையும் படிங்க: முதுகலை வேதியியல் ஆசிரியர்களுக்கு நாளை பணி நியமன கலந்தாய்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.