ETV Bharat / city

எடப்பாடி பழனிசாமி வெளிநாடு பயணம் - பொறுப்பு முதலமைச்சர் யார்?

சென்னை: எடப்பாடி பழனிசாமி வருகிற 28ஆம் தேதி வெளிநாட்டிற்கு அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார்.  தமிழ்நாடு வரலாற்றில் அரசுமுறைப் பயணமாக வெளிநாடுகள் செல்லும் முதல் முதலமைச்சர் என்ற பெருமையை பெறுகிறார்.

business meeting
author img

By

Published : Aug 20, 2019, 1:59 PM IST

Updated : Aug 20, 2019, 9:42 PM IST

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 28ஆம் தேதி சர்வதேச அளவில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணம் முடிவடைந்து மீண்டும் செப்டம்பர் 9ஆம் தேதி தமிழ்நாடு திரும்பும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. 14 நாள்கள் பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சருடன் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், எம்.சி. சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன், விஜய பாஸ்கர் உள்ளிட்ட 21 பேர் உடன் பயணம் செய்யவுள்ளனர்.

பால் பொருட்கள்-கால்நடை, தொழில் ஆகிய துறைகளில் புதிய முதலீடுகளை ஈர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் வெளிநாடு செல்வதால் அரசு நிர்வாகத்தை கவனிக்க பொறுப்பு முதலமைச்சரை நியமிக்க வேண்டியுள்ளது. இந்நிலையில், முதலமைச்சருக்கு அடுத்த இடத்திலிருக்கும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பொறுப்பு முதலமைச்சராக நியமிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

துணை முதலமைச்சர் பதவி என்ற ஒன்று சட்டத்தில் இல்லாத போதிலும், நிதி அமைச்சர் என்ற அடிப்படையில் ஓ. பன்னீர்செல்வத்திற்கு பொறுப்பு முதலமைச்சர் பதவி அளிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. 1980இல் முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றபோது அப்போதைய நிதியமைச்சர் நெடுஞ்செழியனே பொறுப்பு முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இருப்பினும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி பெயரும் பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வார இறுதியில் தமிழ்நாடு அமைச்சரவையைக் கூட்டி பொறுப்பு முதலமைச்சரை தேர்ந்தெடுத்து அவருக்கு முதலமைச்சருக்கான அதிகாரத்தை வழங்கப்படும் எனத் தெரிகிறது.

Intro:Body:

பொறுப்பு முதல்வர் யார் ? 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 28ல் வெளிநாடு பயணம் 

சென்னை, 

தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 28 ந் தேதி வெளிநாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். 

  தமிழக வரலாற்றில்  அரசு முறைப்பயணமாக வெளிநாடுகள் செல்லும் முதல் முதலமைச்சர் என்ற பெருமையை  எடப்பாடி பழனிச்சாமி பெருகிறார். சர்வதேச அளவில்  முதலீடுகளை ஈர்க்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 28  ம் தேதி அமெரிக்கா, லண்டன் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.  செப்டம்பர்  9 ந் தேதி மீண்டும் தமிழகம் திரும்பும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. 

14 நாள்கள் பயணம் மேற்கொள்ளும் முதல்வருடன் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், எம்.சி.சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன், விஜயபாஸ்கர்  உட்பட 21 பேர் உடன் பயணம்  செய்ய உள்ளனர். 

பால் பொருட்கள் மற்றும் கால்நடைகள் துறைக்கும், தொழில் துறையில் புதிய முதலீடுகளை ஈர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

 முதல்வர் வெளிநாடு செல்வதால் அரசு நிர்வாகத்தை கவனிக்க பொறுப்பு முதல்வர் நியமிக்க வேண்டியுள்ளது 

  முதல்வருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பு முதல்வராக நியமிக்கப்படலாம்.  துணைமுதல்வர் பதவி என்ற ஒன்று சட்டத்தில் இல்லாத போதிலும், நிதி அமைச்சர் என்ற அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பொறுப்பு முதல்வர் பதவி அளிக்கப்படலாம்  என கூறப்படுகிறது. 

 1980ல் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். சிகிச்சைக்காக வெளிநாடு சென்ற போது அப்போதைய நிதியமைச்ச்ர் நெடுஞ்செழியனே பொறுப்பு முதல்வராக நியமிக்கப்பட்டார் . இருப்பினும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பெயரும் பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது.  இந்த வார இறுதியில் தமிழக அமைச்சரவை கூடி பொறுப்பு முதல்வரை தேர்ந்தெடுத்து அவருக்கு முதல்வருக்கான அதிகாரத்தை வழங்க உள்ளதாக தெரிகிறது.

Conclusion:
Last Updated : Aug 20, 2019, 9:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.