தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், இங்கிலாந்தில் இருந்து பரவக்கூடிய உருமாறிய கரோனாவைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வரவிருக்கும் விழாக்காலங்களில் திரையரங்குகளுக்கு செல்ல 100% அனுமதி, பள்ளி கல்லூரிகள் திறப்பு ஆகியவை குறித்து மருத்துவ நிபுணர் குழு உடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அப்போது, வளர்ந்த நாடுகளில் தற்போது போடப்பட்டு வரும் கரோனா தடுப்பூசிகள், தமிழகத்தில் போடப்படும்போது புற்றுநோய், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகக் கோளாறு, சர்க்கரை வியாதி உள்ளிட்ட நோய் பாதித்தவர்களுக்கும், வயதானவர்களுக்கும் முன்னிரிமை வழங்கப்பட வேண்டும் என மருத்துவ நிபுணர் குழு பரிந்துரைத்து.
தொடர்ந்து, கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “ தமிழகத்தில் கரோனா தொற்று குறைந்து பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் இருந்து வந்த 13 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு உருமாறிய கரோனா பாதித்துள்ளது என்று தெரிந்தால், உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு குணப்படுத்தப்படுவர். மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் பரிசோதிக்கவும், கண்டறியவும் சுகாதாரத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது ” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: லண்டனிலிருந்து துபாய் வழியாக சென்னை வந்தப் பெண்ணிடம் தீவிர சோதனை!