ETV Bharat / city

துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 22 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் இரங்கல்!

சென்னை: பல்வேறு துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 22 நபர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

cm condolences
cm condolences
author img

By

Published : Sep 24, 2020, 3:51 PM IST

இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்:

  • வாலாசா வட்டம் கொண்டகுப்பம் மதுரா குமணந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சரோஜா என்பவரின் கணவர் பெரியசாமி என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார்,
  • திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் வள்ளுவர் மேடு பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரின் மனைவி பரிமளா என்பவர் பணி முடிந்து வீடு திரும்பும்போது ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார்,
  • கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை வட்டம் சிங்காநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த மாரி என்பவரின் மகன் ரத்தினசாமி என்பவர் நீரேற்றும் பம்பில் அடைப்பினை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார்

என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். மேற்கண்ட பல்வேறு துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 22 நபர்களின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 22 நபர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.