சென்னை கோயம்பேடு சந்தைக்கு சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்து மாநிலம் முழுவதும் கரோனா தொற்று அதிகளவில் பரவியதையடுத்து சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது. இதனால் காய்கறிச் சந்தையை திருமழிசைக்கும், பழ மற்றும் பூ வணிகத்தை மாதவரத்திற்கும் தற்காலிகமாக மாற்றி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் உத்தரவிட்டது.
இதையடுத்து, திருமழிசையில் தற்காலிக காய்கறிச் சந்தை அமைப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர், சனிக்கிழமை ( மே- 9) மாலை திருவள்ளூர் மாவட்டம், திருமழிசையில் தற்காலிக மொத்த காய்கறிச் சந்தை அமைக்க நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்கின்றனர்.
இதையும் படிங்க: திருமழிசை தற்காலிகச் சந்தை - அரசிடம் அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!