ETV Bharat / city

சுகாதாரத்துறைக்கு அடுத்த 2 மாதம் சவாலானது - ராதாகிருஷ்ணன் - chief health secretary

வடகிழக்கு பருவமழை காலமான அடுத்த 2 மாதங்கள் மிகவும் சவாலானது எனவும், மழைக்காலங்களில் பரவும் நோய்களை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் தயாராக இருக்க வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்

author img

By

Published : Oct 31, 2021, 5:23 PM IST

சென்னை: இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், அவர் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், "முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்கும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களில், 2ஆவது தவணை செலுத்த தகுதியானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவதுடன், தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், வடகிழக்கு பருவமழைக் காலங்களில் டெங்கு, பருவமழையினால் வரக்கூடிய தொற்று நோய்களிலும் கவனம் செலுத்த வேண்டும். சிறப்பு முகாம் மூலம் அதிகளவில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டாலும், வாரநாட்களிலும் அதிகளவில் தடுப்பூசி செலுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முழுமையாக கடைபிடிப்பது அவசியமாகும்.

பொது சுகாதாரத்துறைக்கு வடகிழக்கு பருவமழைக் காலம் என்பது மிகவும் சவாலானது. வடகிழக்கு பருவமழைக்காலமான ஆண்டின் கடைசி 3 மாதத்தில் டெங்கு காய்ச்சல் அதிகளவில் பரவ வாய்ப்புள்ளது. நடப்பாண்டில் ஆவடி, சென்னை, காஞ்சிபுரம், சேலம் உள்ளிட்ட பிற பகுதிகளில் டெங்குவை பரப்பும் ஏடிஎஸ் கொசுக்கள் அதிகளவில் உள்ளது.

கண் வலி, குமட்டல், தலைவலி, வாந்தி, எலும்பு வலி, தடிப்புகள், மூட்டு வலி, சோர்வு உள்ளிட்டவை டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளாகும். டெங்கு வைரஸில் இருந்து தப்பிக்க சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். கொசுக்கள் உற்பத்தி இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டில் இருக்கும் தேவையற்ற பொருட்களை நீக்கி விசாலமாக காற்றோட்டத்துடன் வீடு இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.

டெங்கு, மழை காலங்களில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த தயாராக இருக்க வேண்டும். சுகாதாரத் துறைக்கு அடுத்த 2 மாதங்கள் சவாலானதாக இருக்கும். நோய் தடுப்பு பணிகளில் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்த வேண்டும்" என அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: இல்லம் தேடி கல்வி திட்டத்தால் பள்ளிக்கல்வி பாதிக்காது: அமைச்சர் மகேஷ் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.