ETV Bharat / city

தகுதி இருந்தும் பதவி உயர்வு இல்லை - ரூ. 1 கோடி இழப்பீடு கேட்கும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் - chennai news in tamil

உரிய தகுதிகள் இருந்தும், தனக்கு பதவி உயர்வு வழங்காததால் விரக்தியில் விருப்ப ஓய்வு பெற்ற இந்திய வனப்பணி அலுவலர் தமிழ்நாடு அரசிடம் 1 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Chief conservative officer appointment, defamation suit filed, MHC
தகுதி இருந்தும் பதவி உயர்வு இல்லை- ரூ. 1கோடி இழப்பீடு கேட்கும் அரசு ஊழியர்
author img

By

Published : Aug 30, 2021, 6:46 PM IST

சென்னை: இந்திய வனத்துறையில் பணியாற்றிய ராமச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், கடந்த 1981ஆம் ஆண்டு உதவி வன பாதுகாவலராக பணியில் சேர்ந்த நிலையில், 1989ஆம் ஆண்டு இந்திய வனப்பணியில் (IFS) சேர்ந்து 27 ஆண்டுகள் பணியாற்றியதாகவும், அண்ணா பல்கலைக்கழகத்த்தில் புதிதாக துவங்கப்பட்ட பருவநிலை மாற்ற ஆராய்ச்சி மையத்தின் இயக்குனராக கடந்த 2008ஆம் ஆண்டு அயல்பணியில் (Deputation) நியமிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய காலகட்டத்தில், தகுதி இருந்தும் தலைமை வனப்பாதுகாவலர் பதவி உயர்வு வழங்கப்படாததால், மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் கடந்த 2014ஆம் ஆண்டில் வழக்கு தொடர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, கடுமையான மன உளைச்சலின் காரணமாக அதே 2014ஆம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டதாகவும், தனக்கு தலைமை வனப் பாதுகாவலர் பதவி உயர்வு வழங்குவது குறித்து 2015ஆம் ஆண்டு மத்திய நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவிட்டத்..

பல கட்ட போராட்டங்களுக்கு பின் தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் கடந்தாண்டு ஆண்டு பிறப்பித்த உத்தரவில், 2013ஆம் ஆண்டு முன்தேதியிட்டு தன்னை தலைமை வனப் பாதுகாவலராக நியமித்து அரசாணை வெளியிட்டது., ஆனாலும், இதுநாள் வரை தனக்கு ஓய்வு கால பலன்களையும் தரவில்லை.

எனக்கு ஏற்பட்ட அவமதிப்புக்கும், தொந்தரவுகளுக்கும், மன உளைச்சலுக்கும் காரணமான ஊரக வளர்ச்சி துறை செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளான, சங்கர், மோகன் ஆகியோர் ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்” எனவும் கோரியுள்ளார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி பார்த்திபன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, இது தொடர்பாக பதிலளிக்குமாறு ஊரக வளர்ச்சி துறை செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அலுவலர்கள் சங்கர், மோகன் மற்றும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டார். மேலும், வழக்கு விசாரணை செப்டம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இதையும் படிங்க: கர்நாடக அரசை எதிர்த்துப் போராட வேண்டும் - ஜி.கே.மணி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.