ETV Bharat / city

தனியார் பேருந்தில் பாலியல் துன்புறுத்தல்: இன்ஸ்டாகிராமில் பெண்ணின் பதிவால் அதிர்ச்சி! - Bus harassment

பெங்களூருவில் இருந்து சென்னைக்கு தனியார் பேருந்தில் வந்த இளம்பெண்ணுக்கு பேருந்தின் பணியாளர் பாலியல் தொந்தரவு அளித்ததாக அப்பெண் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் துன்புறுத்தல்
பாலியல் துன்புறுத்தல்
author img

By

Published : Jul 31, 2022, 10:31 AM IST

Updated : Jul 31, 2022, 11:23 AM IST

சென்னை: சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த ஜூலை 7ஆம் தேதி தனியார் சொகுசு பேருந்து மூலமாக பெங்களூருவில் இருந்து சென்னை வந்துள்ளார். இரவு நேரத்தில் பேருந்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது, பேருந்தில் வேலை பார்த்த உதவியாளர் ஒருவர், தன்னிடம் அத்துமீறி தகாத முறையில் நடந்தது அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பாலியல் தொல்லை தந்ததாகக் குற்றச்சாட்டு
பாலியல் தொல்லை தந்ததாகக் குற்றச்சாட்டு

இதுகுறித்து பேருந்து நிர்வாகத்திடம் புகார் அளித்திருக்கிறார். மேலும், இணையதளம் மூலமாக பேருந்து டிக்கெட் முன்பதிவு செய்த சம்பந்தப்பட்ட இணையதள நிறுவனத்திற்கும் இதுகுறித்து புகார் அளித்திருக்கிறார். இதேபோல, பாலியல் சீண்டல் அளித்து மன உளைச்சலுக்கு ஆளாகியதால் சம்பந்தப்பட்ட தனியார் பேருந்து இணையதள நிறுவனத்திடம் இருந்து தனக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கேட்டுள்ளார்.

பாலியல் தொல்லை தந்ததாகக் குற்றச்சாட்டு
பாலியல் தொல்லை தந்ததாகக் குற்றச்சாட்டு

அதற்கு, இணையதள தரப்பில் இருந்து எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை என தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். மேலும் இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்க விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பொருளாதார நெருக்கடி: இலங்கையில் அதிகரிக்கும் பாலியல் தொழில்... அத்தியாவசிய பொருள்களுக்காக நடக்கும் அவலம்...

Last Updated : Jul 31, 2022, 11:23 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.