போக்குவரத்துக் கழகங்களில் அடுத்துவரும் காலகட்டங்களில் புதிய பேருந்துகளை வாங்குவதற்குப் பதிலாகத் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து பயன்படுத்த தமிழ்நாடு அரசு முடிவுசெய்துள்ளது. இதற்காக அரசாணை வெளியிடப்பட்டு, மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் தமிழ்நாடு அரசின் இந்த முடிவுக்கு எதிராக சென்னை மாநகர போக்குவரத்து தலைமையகமான பல்லவன் இல்லம் முன்பு பல்வேறு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசின் இந்த முடிவு தனியார்மயத்துக்கு வழிவகுக்கும் என அவர்கள் குற்றம்சாட்டினர். அரசுக்கு எதிராகவும், போக்குவரத்துக் கழகம் தனியார்மயமாக்கப்படுவதற்கு எதிராகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். மோட்டார் வாகன விதி திருத்தப்பட்டதை கைவிட வேண்டும், தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் முடிவை கைவிட வேண்டும், தொழிலாளர்களிடமிருந்து எடுக்கப்பட்ட விடுப்பை திரும்பத்தர வேண்டும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் பணப் பயன்களை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதையும் படிங்க: மெரினா பீச் அருகே டிஜிட்டல் எல்இடி சிக்னல் திறப்பு!