சென்னை: வாகன தணிக்கையில் காவலர்கள் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்ததால் காவலர்களுடன் ஏற்பட்ட மோதலில் திருநங்கை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கோடம்பாக்கம் காமராஜர் காலனியைச் சேர்ந்த திருநங்கை சபினா(19). இவர் பாலியல் தொழில் செய்து வந்துள்ளார். இச்சூழலில் வழக்கம் போல் நேற்றிரவு (ஜூலை 9) தனது நண்பர் செபிகாவுடன் இருசக்கர வாகனத்தில் வள்ளுவர் கோட்டம் அருகே வந்துள்ளார்.
அப்போது அங்கு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவலர்கள் ஊரடங்கை மீறி வெளியே சுற்றியதாகக் கூறி சபினாவின் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர். இதனால் காவலர்களுடன் சபினா வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
உ.பி. ரவுடி விகாஸ் துபே என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை!
பின்னர் உடனே பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை பெறுவதற்காக சபினா நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு சென்று காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கோபடமடைந்த காவலர்கள் சபினாவின் கையில் அணிந்திருந்த வளையல் மற்றும் பொருள்களை உடைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த சபினா அங்கிருந்து புறப்பட்டு கோடம்பாக்கத்திலுள்ள அவரது வீட்டிற்குச் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கே.ஜி.எப்பில் வட்டாட்சியர் கத்தியால் குத்தி கொலை!
இதனை கண்ட அருகிலிருந்த நபர்கள் சபினாவை உடனடியாக மீட்டு, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக நுங்கம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.