சென்னை அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் காவல் நிலையத்தில் ரோந்து வாகனத்தில் உதவி ஆய்வாளர் ஒருவர் பணிபுரிந்துவருகிறார். இவர் சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள புதிய காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்துவருகிறார்.
இதற்கிடையில் கடந்த 15ஆம் தேதி உதவி ஆய்வாளர் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் கரோனா தொற்றுக்கு பரிசோதனை செய்து கொண்டார். இதற்கிடையில் நேற்று அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து சுகாதாரத் துறை அலுவலர்கள் அவரை மீட்டு அண்ணாநகர் தனியார் கல்லூரியில் உள்ள தற்காலிக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதனையடுத்து, அவரது மனைவியும், இரு மகன்களும் வீட்டிலேயே தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, மாநகராட்சி அலுவலர்கள் காவலர் குடியிருப்பை சீல் வைத்து கிருமி நாசினி தெளித்து சுகாதார தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.