ETV Bharat / city

சென்னை - இலங்கை செல்லும் விமானங்களின் எண்ணிக்கை குறைப்பு?

author img

By

Published : Apr 6, 2022, 8:38 AM IST

இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், சென்னையில் இருந்து இலங்கை செல்லும் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதனால், சென்னை - இலங்கை செல்லும் விமான சேவைகளில் ஏதும் மாற்றமிருக்கிறதா என்பது குறித்து இங்கு காண்போம்.

சென்னை இலங்கை செல்லும் விமானங்களின் எண்ணிக்கை குறைப்பா?

சென்னை: இந்தியாவின் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் இலங்கையில் அத்தியாவசிய பொருள்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. மேலும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவையின் விலை பலமடங்கு அதிகரித்துள்ளதால் நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பல்வேறு நாடுகளில் இருந்து இலங்கைக்கு செல்வோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. இதனால், இலங்கைக்கு செல்லும் விமான சேவைகள் குறைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம் டெல்லியில் இருந்து இலங்கைக்கு செல்லும் விமான சேவையை குறைக்க முடிவு செய்துள்ளது.

வாரத்திற்கு 16 விமானங்கள்: அதன்படி, ஏர் இந்தியா நிறுவனம் டெல்லி, சென்னையில் இருந்து வாரத்திற்கு 16 விமானங்களை இலங்கைக்கு இயக்குகின்றது. தற்போது, டெல்லியில் இருந்து இலங்கை செல்லும் 7 விமான சேவைகளை ஏப்ரல் 9ஆம் தேதியில் இருந்து 4 ஆக குறைக்க உள்ளது.

ஆனால், சென்னையில் இருந்து வாரத்திற்கு 9 விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் இலங்கைக்கு இயக்கி வருகிறது. அதில் எந்த ஒரு மாற்றமுமில்லை என அறிவித்துள்ளது. பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால், பிற தனியார் விமான சேவை நிறுவனங்களும் சென்னையில் இருந்து இலங்கைக்கு செல்லும் விமானங்களின் எண்ணிக்கையை குறைக்கப்போவதாக தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து, சென்னை விமான நிலைய அதிகாரி ஒருவர் நம்மிடம் கூறியதாவது, "சென்னை விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா, இன்டிகோ, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், ஸ்பைஸ்ஜெட் என நாள் ஒன்றுக்கு 4 விமானங்கள் இலங்கைக்கு இயக்கப்படுகின்றன. அதேபோல், இலங்கையில் இருந்து சென்னைக்கு நாளொன்றுக்கு 3 அல்லது 4 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான பயணிகள் வந்து செல்கின்றனர்.

விமான கட்டணம்: இந்தச் சூழலில், இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்தாலும் சென்னையில் இருந்து இலங்கை செல்லும் விமான சேவைகளில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. இருப்பினும், பயணிகளின் எண்ணிக்கை சிறிது குறைந்துள்ளது. ஆனாலும், விமான சேவைகளில் எந்த மாற்றமுமின்றி தொடர்ந்து இயங்குகிறது. மேலும், சென்னையில் இருந்து இலங்கை செல்லும் விமானங்களில் கட்டணங்களும் மாற்றமின்றி நீடிக்கிறது" என்றார்.

இதையும் படிங்க: விமான கழிவறையில் தங்கக்கட்டிகள்; கடத்தல் ஆசாமிகள் தப்பியோட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.