ETV Bharat / city

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம்: சலுகையை இழக்கும் பொதுமக்கள் - tneb news in chennai

சென்னை: இரண்டு மாதங்களுக்குக்கு ஒருமுறை மின் கட்டணம் வசூலிப்பதால், 100 யூனிட்களுக்கான சலுகையை இழக்கின்றோம் என பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சென்னை: இரண்டு மாதங்களுக்குக்கு ஒருமுறை மின் கட்டணம் வசூலிப்பதால், 100 யூனிட்களுக்கான சலுகையை இழக்கின்றோம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

author img

By

Published : Feb 20, 2020, 10:02 PM IST

தமிழ்நாடு மின்சார வாரியம், மின் பகிர்மான கழகத்தால் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு அதற்கான கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது.மாநகர பகுதிகளில் உள்ள வீடுகளை பொறுத்தவரை முதல் 100 யூனிட்கள் வரை மின்சாரம் இலவசம் என்றும், அதனை தாண்டியவுடன் 2.50 பைசா கட்டணமாக நிர்ணயக்கப்பட்டுள்ளது. மின் வாரியம் பொதுமக்களின் வீடுகளுக்கு மின் இணைப்பாக 100 யூனிட்கள் வரை இலவசமாக வழங்கப்படுவது ஒரு சலுகை போன்று தெரிந்தாலும், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும்போது அச்சலுகையும் தாண்டி மின் நுகர்வோர்கள் அதிகம் பாதிக்கப்படும் நிலையில்தான் உள்ளனர்.

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் செலுத்துவதால் சலுகையை இழப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சில வருடங்களுக்கு முன்பு மாதம் ஒரு முறை மட்டுமே மின் கட்டணம் செலுத்தப்பட்ட போது, பொதுமக்களுக்கு எளிதாக இருந்த மின் கட்டணம் தற்போது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் செலுத்துவதால் அதிக கட்டணமும், மறைமுக சலுகை இழப்பும் ஏற்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதனால் மறைமுகமாக மின்சார வாரியத்திற்கு அதிக வருவாய் கிடைக்கிறது என்றாலும், பொதுமக்களுக்கு சலுகை கிடைப்பதில் அர்த்தம் இல்லாமல் போய் விடுகிறது என்கிறனர் பொதுமக்கள். இதனால் வீடுகளில் மின் கட்டணத்தை மாதம் ஒரு முறை வசூலிக்கும் முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: விவசாயி உயர்மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.