நிவர் புயல் காரணமாக தமிழ்நாடு அரசு சார்பில் சார்பில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் ரயில், பேருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை நாளை(நவ.25) காலை 10 மணி முதல் காலவரையின்றி ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
மேலும், இன்று(நவ.24) மதியம் முதல் நாளை(நவ.25) காலை 10 மணி வரை புறநகர் ரயில்கள் இயக்கப்படுவது குறித்து பருவ நிலைக்கு ஏற்றவாறு முடிவு செய்யப்படும் என்றும், மோசமான வானிலை இருந்தால் ரயில்கள் ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ”புறநகர் மின்சார ரயில்களை இயக்க உத்தரவிடுக” - எம்பி சு.வெங்கடேசன்