ETV Bharat / city

பேருந்து விபத்தில் இறந்த மாணவரின் தாயாருக்கு அமைச்சர் ஆறுதல்

சென்னை, வளசரவாக்கத்தில் தனியார் பள்ளி பேருந்து மோதி உயிரிழந்த மாணவனின் பெற்றோருக்கு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செல்போன் மூலம் ஆறுதல் கூறினார். பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

Chennai-child
Chennai-child
author img

By

Published : Mar 28, 2022, 8:22 PM IST

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில், பள்ளியின் பேருந்து மோதி இரண்டாம் வகுப்பு மாணவன் தீக்க்ஷித் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விபத்துக்கு காரணமான பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளும், காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, விபத்து குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸிடம் விவரமாக கேட்டறிந்தார். பின்னர் முதன்மைக் கல்வி அலுவலர் செல்போன் மூலமாக குழந்தையின் தாயார் ஜெனிஃபரிடம் பேசினார் . விபத்தில் குழந்தை இறந்தது குறித்து ஆறுதல் தெரிவித்த அவர், பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

இது தொடர்பாக பேசிய முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், விபத்து குறித்து எழுத்துப்பூர்வமான விளக்கம் கேட்டு பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளதாகவும், பள்ளி நிர்வாகம் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க : பள்ளி வாகனத்தில் சிக்கி மாணவன் பலி - தாளாளர் மீது வழக்குப்பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.