ETV Bharat / city

சென்னையில் பள்ளி பேருந்துகளின் தரம் குறித்து ஆய்வு - transport officer inspection

சென்னை: கோடை விடுமுறை முடிந்து அரசு, தனியார் பள்ளிகள் ஜூன் 1ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில், தனியார் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னையில் பள்ளி பேருந்துகள் ஆய்வு
author img

By

Published : May 19, 2019, 11:02 AM IST

அதன் ஒரு பகுதியாக பூவிருந்தவல்லி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட ஆவடி, பூவிருந்தவல்லி, மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் 66 தனியார் பள்ளிகளைச் சார்ந்த 348 வாகனங்களில் 255-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

இதனை பூவிருந்தவல்லி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சம்பத் ஆய்வு செய்து வாகனங்களில் அவசர கால வழி, படிக்கட்டுகள், சீட்டுகள், தீயணைப்புக் கருவிகள் என அனைத்தும் கவனிக்கப்பட்டது. முறையாக இல்லாத 13 வாகனங்கள் திருப்பி அனுப்பட்டன. அனுமதி மறுக்கப்பட்ட வாகனங்களின் குறைகளை சீர் செய்து மீண்டும் ஆய்வுக்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டது.

பள்ளி மாணவர்களை வாகனங்களில் முறையாக ஏற்றிச் செல்ல வேண்டும், மாணவர்கள் இறங்கி சென்று விட்டார்களா என்பதை உறுதி செய்தபிறகே வாகனத்தை இயக்க வேண்டும், வாகனத்தில் மாணவர்களை அழைத்து செல்லும் ஓட்டுநர் அதிக வயதுடையவராக இருக்கக்கூடாது என பள்ளி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு கண்பார்வை தெளிவாக தெரிகிறதா என்பதை உறுதிசெய்ய அவர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.

பூவிருந்தவல்லி, 
மே.18-

கோடை விடுமுறை முடிந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 1 ம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் தனியார் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பூவிருந்தவல்லி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட ஆவடி,பூவிருந்தவல்லி,மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 66 தனியார் பள்ளிகளை சார்ந்த 348 வாகனங்களில்255 க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஆய்வு உட்படுத்தப்பட்டன.

இதனை பூவிருந்தவல்லி வட்டார போக்குவரத்து அலுவலர் சம்பத் பார்வையிட்டு பள்ளி வாகனங்களின் அவசர கால வழி, படிக்கட்டுகள், சீட்டுகள், தீயணைப்பு கருவிகள் உள்ளிட்டவை சரியாக உள்ளதா என்றும் வாகனங்களின் சான்றுகள், ஓட்டுனர்களின் உரிமம் ஆகியவை முறையாக பராமரிக்கப்பட்டுள்ளதா என்றும் சோதனை செய்தார். பள்ளி மாணவர்களை வாகனங்களில் முறையாக ஏற்றி செல்ல வேண்டும் மாணவர்கள் இறங்கி சென்று விட்டார்களா என்பதை உறுதி செய்தபிறகே வாகனத்தை இயக்க வேண்டும் மேலும் வாகனத்தில் பிள்ளைகளை அழைத்து செல்லும் நபர் அதிக வயதுடையவராக இருக்ககூடாது என ஓட்டுனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.இதனை தொடர்ந்து பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு கண் பார்வை தெளிவாக தெரிகிறதா என்பதை உறுதி செய்ய ஓட்டுனர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.

பின்னர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட வாகனங்களில்  அவசர கால வழி, படிக்கட்டுகள், சீட்டுகள், தீயணைப்பு கருவிகள் முறையாக இல்லாத 13 வாகனங்கள்  திருப்பி அனுப்பட்டது.அனுமதி மறுக்கப்பட்ட வாகனங்கள் குறைகளை சீர் செய்து மீண்டும் ஆய்வுக்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டது.
இதில் ஆவடி வட்டாட்சியர் சந்திரன் ,வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள்  ரவிகுமார் ,விஜயா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.