சென்னை:போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் வகையில்,சிக்னல்களை நவீனப்படுத்தும் முயற்சியில் சென்னை பெருநகரப் போக்குவரத்து காவல்துறை ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக எழும்பூர் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் காவல் ஆணையர் அலுவலக சிக்னல், ரித்தா்ட்டன் சாலை சிக்னல், எழும்பூா் காந்தி-இா்வின் சாலை சிக்னல், நாயா் பாலம் சிக்னல், புரசைவாக்கம் தாச பிரகாஷ் சிக்னல் என வரிசையாக 5 சிக்னல்களில் ரிமோட் கண்ட்ரோல் வசதி கொண்டு இயக்கும் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.
மெரினா காந்தி சிலை சிக்னலில் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கும் சோதனை நடத்தி வருகிறது. சென்னையில் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் சிக்னல்கள் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடும் காவலர்கள் சிக்னலை இயக்குவதற்கு, அதன் கட்டுப்பாட்டு கருவி அருகே ஒரே இடத்தில் நிற்பதைத் தவிர்த்து, வாகன நெரிசலுக்கு ஏற்றாா்போல, சிக்னல் இருக்கும் பகுதியில் வெவ்வேறு இடங்களில் இருந்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் சிக்னலை இயக்கலாம்.
அதேபோல வெயில், மழை காலகட்டங்களில் பாதுகாப்பான இடத்தில் நின்று கொண்டு சிக்னலை இயக்குவதற்கு ஏற்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரிமோட் கண்ட்ரோல் சிக்னல்களின் இயக்கத்தைப் பொருத்து அனைத்து சிக்னல்களிலும் இவ்வசதி கொண்டுவர ஏற்பாடு செய்ய உள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:மாயமான மயில் சிலையை கண்டறிய குழு அமைத்து அரசாணை!