ETV Bharat / city

மூத்த பத்திரிகையாளர் எழுத்தாளர் ஆர்.சி.சம்பத் மறைவு: சென்னை பத்திரிகையாளர் மன்றம் இரங்கல்! - மூத்த பத்திரிகையாளர் எழுத்தாளர் ஆர்.சி.சம்பத்

மூத்த பத்திரிகையாளர் ஆர்.சி.சம்பத்தின் மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

senior journalist R.C. Sambath demise
senior journalist R.C. Sambath demise
author img

By

Published : Dec 29, 2020, 6:06 PM IST

சென்னை: பிரபலமான வார இதழ்களில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் ஆர்.சி. சம்பத் (64). இவர் பெங்களூரு சென்று திரும்பும் வழியில் மாரடைப்பு காரணமாக காலமானார். இவரது மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள இரங்கல் செய்தியில், மூத்த பத்திரிகையாளர் ஆர்.சி.சம்பத் உடல் நலகுறைவினால் மரணமடைந்தார் என்ற செய்தி பெரும் வேதனையைத் தருகிறது.

திரையுலகில் இயக்குநராக களம் கண்ட ஆர்.சி.சம்பத், பின்னர் இதழியல் துறையில் தாய், குமுதம் உள்ளிட்ட பல பத்திரிகைகளில் பணியாற்றியவர். இயல்பில் நகைச்சுவை உணர்வு மிக்க ஆர்.சி.சம்பத் வரலாற்று சம்பவங்களை, பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா உள்ளிட்ட பேராளுமைகளை உரிய வகையில் எழுத்தில் எடுத்தாளும் திறமைப் படைத்தவர். நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர்.

அவரது மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் நெஞ்சார்ந்த ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறோம். அவரது இறுதிச்சடங்குகள் நாளை (டிச.30) நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.சி. சம்பத், செய்திவாசிப்பாளரும், பிக்பாஸ் 4ஆவது சீசனில் பங்கேற்று சமீபத்தில் வெளியேறிய அனிதாவின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: குற்றப் பதிவேட்டில் 59 பேர் நீக்கம் - எஸ்பி கண்ணன் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.