சென்னையை அடுத்த பூவிருந்தவல்லயில் இருக்கும் பனிமலர் பொறியில் கல்லூரியுடன் வேர்ல்ட் ஹூமானிடெரியன் ட்ரைவ் (world humanitarian drive) எனும் பன்னாட்டு தொண்டு நிறுவனம் சேர்ந்து 'சைன்ஸ் பசார்' (scince bazzar) என்ற தலைப்பில் இரண்டு நாள்கள் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
பனிமலர் கல்லூரி செயலர் முனைவர் சின்னதுரை தலைமையில் நடைபெற்ற கண்காட்சியின் கடைசி நாளான இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.
குறிப்பாக கண்காட்சியில் இடம்பெற்றிருந்த விண்வெளியில் பயன்படுத்தப்படும் வாகனம், நீர் மேலான்மை குறித்த கருவிகள், பசுமை வாகனம் உள்பட ட்ரிம்மர்கள் கொண்டு முடி வெட்டும் புதிய கருவி, கார் ரேஸ் மாடலில் வடிவமைக்கப்பட்ட கார், பசுமை ஆட்டோ ஆகியவை பார்வையாளர்களைக் கவர்ந்தன. மாணவர்களின் படைப்புகளை உலகின் பல்வேறு இடங்களிலிருந்து கலந்துகொண்ட அறிவியாளர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள் மதிப்பீடு செய்து சிறந்த படைப்புகளை தேர்ந்தெடுத்தனர்.
இதுகுறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், "இந்த அறிவியல் கண்காட்சியில் சைன்ஸ் பசார் எனும் தொழில்நுட்பம் சார்ந்த புதிய கண்டுபிடிப்புகளுக்கான சந்தையாக விளங்கும். மேலும் உலக அளவில் இந்தியா 356 மில்லியன் இளைஞர்களைக் கொண்ட நாடாக விளங்குகிறது. எனவே குறிப்பாக பொறியில் மாணவர்களிடையே புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு புதிய கண்டுபிடிப்புகளுடன் புதிய யோசனைகள் ஒன்று சேர்ந்து புதிய கண்டுபிடிப்புகள் உருவாக உதவுகிறது" எனத் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் பனிமலர் கல்லூரி இயக்குநர் சக்திகுமார் உட்பட மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: சென்னையில் தனியார் பள்ளி அறிவியல் கண்காட்சி