சென்னையில் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றத்துக்காக 289 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் தொடர்புடைய 166 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், தனிமைப்படுத்தப்பட்ட உத்தரவை மீறியதால் 2 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
போக்குவரத்து விதிகளை மீறியதாகக் கூறி 1,347 வழக்குகளும், இந்த வழக்கில் தொடர்புடைய 689 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஊரடங்கு உத்தரவை மீறி காரணமன்றி சாலையில் சுற்றி வரும் நபர்களை கண்காணித்து வரும் போலீஸார் அவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அத்துடன் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தவும் செய்கின்றனர்.