ETV Bharat / city

குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பு! - குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் குறித்து சென்னை காவல்துறை

சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு அனுமதி வழங்க சென்னை காவல் துறை அனுமதி மறுத்துள்ளது.

Chennai Police
Chennai Police
author img

By

Published : Dec 19, 2019, 3:54 PM IST

நாடாளுமன்றத்தில் இம்மாத தொடக்கத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இதேபோல, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டங்களையும் பேரணிகளையும் நடத்த அனுமதி கோரி, 54-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் சென்னை காவல் துறையிடம் விண்ணப்பித்திருந்தனர்.

இந்நிலையில், அனுமதி கோரி விண்ணப்பித்திருந்த அனைவருக்கும் சென்னை காவல் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீசுக்கு உரிய பதிலை அளிக்காததால், போராட்டங்கள் நடத்த அனுமதி கோரி விண்ணப்பித்திருந்த அனைவருக்கும் அனுமதி வழங்க சென்னை காவல் துறை மறுத்துள்ளது.

இருந்தபோதும், குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா நடத்தும் நிகழ்ச்சிக்கு எந்தவித தடையும் இல்லை என்றும் சென்னை காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த உமர் காலித் கைது

Intro:Body:சென்னை வள்ளுவர் கோட்டத்தில் குடி உரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் மற்றும் பேரணி நடத்த அனுமதி கேட்ட அனைவருக்கும் சென்னை காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 54 மேற்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் போராட்டம் பேரணி நடத்த அனுமதி கேட்டிருந்தது

அனுமதி கேட்ட அனைவருக்கும் சென்னை காவல் துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது

சென்னை காவல்துறை அனுப்பிய நோட்டீசுக்கு உரிய பதில் அளிக்காததால் 54 அனைத்துக்கும் அனுமதி மறுத்து சென்னை காவல் துறை உத்தரவிட்டுள்ளது

இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா குடியுரிமைச் சட்டத்திற்கு ஆதரவாக நடைபெறும் போராட்டத்திற்கு எந்தவித தடையும் இல்லை என சென்னை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதுConclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.