சென்னை: ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடர், சென்னை நுங்கம்பாக்கம் SDAT டென்னிஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டிகளின் முதல் ஆட்டத்தில் செக் குடியரசின் லிண்டா ஃப்ரூவிர்டோவா மற்றும் அர்ஜென்டினாவின் நதியா பொடோர்ஸ்கா ஆகியோர் மோதினர்.
இதில் 17 வயதான லிண்டா, முதல் செட்டை 5-7 என கடுமையாகப் போராடி பொடோர்ஸ்காவிடம் கைவிட்டாலும், இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்களை 6-2, 6-4 என தன் வசப்படுத்தி 2-1 என்ற செட் கணக்கில் அபாரமாக வென்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இதனையடுத்து ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற மற்றொரு அரையிறுதிப்போட்டியில், ஜெர்மனியின் கேட்டி ஸ்வான் மற்றும் போலந்தின் மேக்டா லினெட் ஆகியோர் மோதினர். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய போலந்து வீராங்கனை மேக்டா லினெட் 3 புள்ளிகளை அடுத்தடுத்து எடுத்த நிலையில், ஜெர்மனியின் கேட்டி ஸ்வான் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாகப்போட்டியில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்த நிலையில், போலந்து வீராங்கனை மேக்டா லினெட் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டது.
-
The No.3 seed @MagdaLinette is through to the #ChennaiOpen final after Swan retires.
— wta (@WTA) September 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Final score: 3-0. pic.twitter.com/2g1kfFL4cp
">The No.3 seed @MagdaLinette is through to the #ChennaiOpen final after Swan retires.
— wta (@WTA) September 17, 2022
Final score: 3-0. pic.twitter.com/2g1kfFL4cpThe No.3 seed @MagdaLinette is through to the #ChennaiOpen final after Swan retires.
— wta (@WTA) September 17, 2022
Final score: 3-0. pic.twitter.com/2g1kfFL4cp
அதேபோல இரட்டையர் பிரிவு அரையிறுதிப்போட்டியில், கனடாவின் தாப்ரோஸ்கி, பிரேசிலின் லூசியா ஸ்டேபனி ஜோடியினர், தாய்லாந்தின் பேங்க்டிரன் பிலிபுச், மொயுகா உச்சிஜிமா ஜோடி உடன் மோதி 6-3, 6-3 என 2 நேர் செட்களை கைப்பற்றி அபார வெற்றி பெற்றதுடன், இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.
எனவே, இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில், ஒற்றையர் பிரிவில் போலந்து வீராங்கனை மேக்டா லினெட் மற்றும் செக் குடியரசு வீராங்கனையான லிண்டா ஃப்ரூவிர்டோவா மோத உள்ளனர். இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் கனடாவின் தாப்ரோஸ்கி, பிரேசிலின் லூசியா ஸ்டேபனி ஜோடியினர், ரஷ்யாவின் அன்னா பிளிங்கோவா, ஜார்ஜியாவின் நடேலா டிசலமிட்ஜ் ஜோடியுடன் இறுதிப்போட்டியில் களம் காண்கின்றனர்.
-
Her dream run continues 🤩
— wta (@WTA) September 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Linda Fruhvirtova digs deep and moves past Podoroska for a spot in the final!#ChennaiOpen pic.twitter.com/dYpJzJddjm
">Her dream run continues 🤩
— wta (@WTA) September 17, 2022
Linda Fruhvirtova digs deep and moves past Podoroska for a spot in the final!#ChennaiOpen pic.twitter.com/dYpJzJddjmHer dream run continues 🤩
— wta (@WTA) September 17, 2022
Linda Fruhvirtova digs deep and moves past Podoroska for a spot in the final!#ChennaiOpen pic.twitter.com/dYpJzJddjm
முன்னதாக நேற்று லிண்டா ஃப்ரூவிர்டோவா முதல் செட்டை விளையாடிக்கொண்டிருந்தபோது கணுக்கால் பகுதியில் அசெளகரியமாக உணர்ந்ததன் காரணமாக, அவ்வப்போது மருத்துவக்குழுவினரை அழைத்து சிகிச்சைப் பெற்று வந்ததும், அதன்பிறகு போட்டியில் தொடர்ந்து விளையாடி வெற்றி பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்த சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடர் இன்று இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இறுதிப்போட்டிகள் இன்று(செப்.18) மாலை 5 மணிக்கு நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: கவுண்டி கிரிக்கெட் போட்டியில் இருந்து உமேஷ் யாதவ் விலகல்