ETV Bharat / city

தென் மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை - இடி மின்னலுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்பு!

தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கன மழையும், மதுரை, தென்காசி, ராமநாதபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

rain alert, chennai metrological department, weather update, வானிலை அறிக்கை, சென்னை வானிலை, தமிழ்நாடு வானிலை, மழை, மிக கனமழைக்கு வாய்ப்பு
தென் மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை
author img

By

Published : Nov 1, 2021, 4:36 PM IST

சென்னை: வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "குமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிக்கு நகரக் கூடும். அதனைத் தொடர்ந்து 48 மணி நேரத்தில் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும்.

இதன் காரணமாக இன்றைய தினம் (ஆரஞ்சு எச்சரிக்கை) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும் பெய்யும்.

தென் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

மதுரை, தென்காசி, ராமநாதபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை (நவம்பர் 2) டெல்டா மாவட்டங்கள், கடலூர், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

நவம்பர் 3ஆம் தேதி மதுரை, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்காம் தேதி வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நவம்பர் 5இல், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் உள்ள அநேக இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்" என கூறப்பட்டுள்ளது.

சென்னை வானிலை

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

கொத்தவாச்சேரி (கடலூர்) 15

சேத்தியாத்தோப்பு (கடலூர்), பாண்டவையார் (திருவாரூர்) தலா 9

திருவாரூர் (திருவாரூர்) 8

திருத்துறைப்பூண்டி (திருவாரூர் ), குறிஞ்சிப்பாடி (கடலூர்), பரங்கிப்பேட்டை (கடலூர்) தலா 7

புவனகிரி (கடலூர்), சோழவரம் (திருவள்ளூர்), சிதம்பரம் (கடலூர்), குலசேகரப்பட்டினம் (தூத்துக்குடி), இரணியல் (கன்னியாகுமரி) தலா 6

மன்னார்குடி (திருவாரூர்), ராதாபுரம் (திருநெல்வேலி), கொள்ளிடம் (மயிலாடுதுறை), அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்), கொடவாசல் (திருவள்ளூர்), புழல் (திருவள்ளூர்), நெய்வேலி (கடலூர்), வலங்கைமான் (திருவாரூர்), ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்), காயல்பட்டினம் (தூத்துக்குடி), ராசிபுரம் (நாமக்கல்), நீடாமங்கலம் (திருவாரூர்), கிராண்ட் அணை (தஞ்சாவூர்), பெருங்களூர் (புதுக்கோட்டை), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), கடலூர் தலா 5.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

நவம்பர் 1,2ஆகிய தினங்களில், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நவம்பர் 1 முதல் 3ஆம் தேதி வரை, கேரள கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

நவம்பர் 4, 5ஆகிய தினங்களில், கேரள கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதன் காரணமாக மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கடந்த ஆட்சியில் கணக்கில் வராத 2000 கோடி நிதி மீட்கப்பட்டுள்ளது - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.