இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”அதிதீவிர புயலான ஆம்பன் தற்போது மேற்கு வங்க கடற்கரையில் இருந்து 130 கிலோமீட்டர் தொலைவிலும், கொல்கத்தாவிலிருந்து 190 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இது மேலும் வடக்கு, வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்னும் சில மணி நேரங்களில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புயல் கரையை கடக்கும் போது, மணிக்கு 150 முதல் 180 கிலோமீட்டர் வேகத்தில் கடும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். இதன் காரணமாக, மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதியில் காற்று, 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு அப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்.
மேலும், மத்திய மற்றும் வட கடல் பகுதிகளுக்கும் மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியசையும், குறைந்த பட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியசையும் ஒட்டியிருக்கும் ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆம்பன் புயல்: மரம் விழுந்து இருவர் காயம்