ETV Bharat / city

தென்தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு! - தென்தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

status
status
author img

By

Published : Jan 9, 2021, 2:05 PM IST

இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள காட்சிப்பதிவில், ”இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், மதுரை, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்கள், புதுவை பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிகக் கனமழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களின் அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

தென்தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 10 முதல் 13 ஆம் தேதி வரை முறையே தென்மேற்கு வங்கக்கடல், குமரிக்கடல், தென்கிழக்கு அரபிக்கடல், கேரள கடலோரம் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்கூறிய பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயம் செழிக்கும் - கார்த்திகேய சிவசேனாபதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.