ETV Bharat / city

காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கப் பணி - அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

author img

By

Published : Feb 5, 2021, 5:04 PM IST

சென்னை காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம் தொடர்பாக மீனவர்கள் அணுகக் கூடிய பகுதிகளில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில், மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Chennai kattupalli Port Expansion case
Chennai kattupalli Port Expansion case

சென்னை: காட்டுப்பள்ளி துறைமுகம் விரிவாக்கம் பணி தொடர்பாக, மத்திய மாநில அரசுகள் பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த பாரம்பரிய மீன்பிடிப்போர் சங்கத்தின் தலைவர் எத்திராஜ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மத்திய அரசும், தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் ஆறு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கைத் தள்ளிவைத்தனர்.

முன்னதாக எத்திராஜ் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டின்படி தனியார் நிறுவனத்தின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம் தொடர்பான அறிவிக்கையை வெளியிடப்பட்டு உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விரிவாக்கத்தால் பாதிக்கப்படக்கூடிய அருகில் வசிப்பவர்களிடம் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையின்படி, கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த வேண்டும் என்றும், ஆனால் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தைப் பொதுமக்கள் எளிதில் சென்று வர முடியாத 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மஞ்சூரில் நடத்துவதாக அறிவித்துள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விரிவாக்கத்தால், துறைமுகத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள தங்கள் அரங்கன்குப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும், இதனால் ஏற்படக்கூடிய கடல் அரிப்பால், கடலோர கிராமங்கள் காணாமல் போகும் என்றும் அச்சம் தெரிவித்துள்ளார்.

2006ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையின் அடிப்படையில், பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் அருகிலேயே நடத்தத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.