ETV Bharat / city

சென்னை ஐஐடியில் 1.60 லட்சம் அமெரிக்க டாலரில் இருக்கை!

சென்னை ஐஐடியில் புதுமை கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளவும், புதிய பொருட்களை உருவாக்கவும், ‘வெங்கட்ராமன் மற்றும் சீதா சீனிவாசன்’ இருக்கை 1,60,000 அமெரிக்க டாலர் தொகையில் தொடங்கியுள்ளது.

chennai iit
chennai iit
author img

By

Published : Feb 17, 2022, 7:23 AM IST

சென்னை: சென்னை ஐஐடியில் புதுமையான கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளவும், புதிய பொருள்களை உருவாக்கவும், ‘வெங்கட்ராமன் மற்றும் சீதா சீனிவாசன்’ இருக்கை 1,60,000 அமெரிக்க டாலர் தொகையில் தொடங்கியுள்ளது.

இந்த இருக்கைக்காக, அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழக மேலாண்மைத்துறை கௌரவ பேராசிரியர் வி.‘சீனு’ சீனிவாசன், 1,60,000 அமெரிக்க டாலர் தொகையை வழங்கியுள்ளார். சென்னை ஐஐடி-யின் முன்னாள் மாணவரான இவர், இந்த நிறுவனத்தின் 1966ஆம் ஆண்டு இயந்திரவியல் பொறியியலில் இளநிலை பட்டப்படிப்பில் தங்கப்பதக்கம் பெற்றவர்.

இவர் இதற்கு முன்பு ஸ்டான்போர்டு வர்த்தகப் பள்ளியின் முனைவர் படிப்புக்கான இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

சென்னை ஐஐடியில் 1,60,000 அமெரிக்க டாலரில் இருக்கை

புதிய இருக்கை தொடக்க விழாவில் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றிய பேராசிரியர் வி.‘சீனு’ சீனிவாசன், சென்னை ஐஐடி-யில் தாம் பெற்ற தலைசிறந்த கல்விக்காக மிகுந்த நன்றிக்கடன் பட்டிருப்பதாக குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக பேராசிரியராக பணியாற்றி வருபவர் என்ற அடிப்படையில், இந்தியாவின் முன்னேற்றத்திற்கு உயர் தரம் வாய்ந்த கல்வி மிகவும் அவசியம் என்பதை தாம் உறுதியாக நம்பிக்கைக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

தாம் வழங்கியுள்ள தொகையின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த இருக்கை, சென்னை ஐஐடி ஏற்கனவே வழங்கி வரும் தரமான கல்வியை மேலும் மேம்படுத்தும் எனத் தெரிவித்தார்.

இதில் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, ”இந்த இருக்கைக்கு ஏற்பாடு செய்து கொடுத்துள்ள பேராசிரியர் வி.‘சீனு’ சீனிவாசன், ஏராளமான மக்களுக்கு உந்துசக்தியாக திகழ்கிறார். கடந்த இருபது ஆண்டுகளாக சென்னை ஐஐடி பல்வேறு புதுமையான கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு வருகிறது. தேசிய நிறுவனங்களுக்கான தரவரிசையில் இடம் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வாக்குப்பதிவு அன்று விடுமுறை அளிக்க அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.