ETV Bharat / city

'கிராமப்புற மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திட்டங்கள்'- சென்னை ஐஐடி புதிய இயக்குநர் காமகோடி - kamakoti special interview

சென்னை ஐஐடியில் கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் படிப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதுடன், அவர்களுக்கான பயிற்சியை அளிக்கவும் அரசுடன் இணைந்து செயல்படவும் திட்டமிட்டுள்ளோம். மேலும் வேலை வாய்ப்பில் வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கப்பட்டு , தகுதியான அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என சென்னை ஐஐடியின் புதிய இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார்.

chennai iit director kamakoti exclusive interview
சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி
author img

By

Published : Jan 28, 2022, 7:57 PM IST

சென்னை: சென்னை ஐஐடியின் புதிய இயக்குநராக பதவி ஏற்றுக்கொண்டுள்ள பேராசிரியர் காமகோடி ஈடிவி பாரத் தமிழ் ஊடகத்திற்கு பிரத்யேகப் பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, " உயர் கல்வி நிறுவனங்களுக்கான தேசிய தரவரிசைப்பட்டியலில் கடந்த சில ஆண்டுகளாக, சென்னை ஐஐடி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

அதனைத்தொடர்ந்து பெற்று தக்க வைப்பது சவாலானது. அதற்கானப் பணிகளை மேற்கொள்வேன்.

மேலும், சென்னை ஐஐடியின் தரத்தை உலகளவில் உயர்த்துவதற்கானப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இதற்காக எம்.டெக் பாடப்பிரிவில் ஒன்பது புதிய படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் உலகளவில் இருந்து மாணவர்கள் ஐஐடியில் வந்து கல்வி கற்க முடியும்.

பல்வேறு ஆராய்ச்சிகள்

சென்னை ஐஐடி ஆராய்ச்சியின் மூலம் சமூகத்திற்குப் பயனளிக்கும் வகையில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

குறிப்பாக, இந்தியாவில் முற்றிலும் தயார் செய்யப்பட்ட இந்தியாவின் முதல் மைக்ரோ பிராசசர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு பயன்படும் சக்கர நாற்காலி, மனிதன் இல்லாமல் சாக்கடையை சுத்தம் செய்யும் வகையிலான ரோபோடிக் இயந்திரம் போன்ற பல கண்டுபிடிப்புகளை செய்துள்ளோம்.

மேலும், எதிர்காலத்திற்குப் பயன்படும் வகையிலான பல்வேறு ஆராய்ச்சிகளிலும், தற்காலப் பயன்பாட்டிற்கான ஆராய்ச்சியிலும் கவனம் செலுத்தி வருகிறோம்.

ஆன்லைனில் பிஎஸ்சி படிப்பு

கரோனா காலத்தில் ஆன்லைன் முறையில் கல்வி அதிகளவில் பயன்பாட்டில் இருந்து வருகிறது. சென்னை ஐஐடியில் படிக்க விரும்பி இடம் கிடைக்காதவர்களுக்காக ஆன்லைனில் பிஎஸ்சி பாடப்பிரிவில் கல்வி அளித்து, சான்றிதழும் அளித்து வருகிறோம்.

இந்த திட்டத்தின் கீழ் மேலும் பல புதியப் பாடப்பிரிவுகளையும் தொடங்குவதற்குத் திட்டமிட்டுள்ளோம்.

மாணவர்களுக்கான வசதிகள்

சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி

பொறியியல் படிக்கும் மாணவர்கள் உயர் கல்வியில் ஐஐடியில் சேர்வதற்கான வசதிகளை செய்து தருகிறோம். பொறியியல் மாணவர்கள் தங்களின் செய்முறை பயிற்சி காலத்தினை சென்னை ஐஐடியிலும் செய்ய முடியும்.

சென்னை ஐஐடியில் தொழில்நுட்ப மேம்பாடு, கற்றல் தேசிய திட்டத்தின் கீழ் (NPTEL) மாணவர்களுக்குப் புதிய பாடத்திட்டங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

சென்னை ஐஐடியில் உள்ள ஆய்வகங்கள் குறித்து பள்ளி மாணவர்கள் நேரில் பார்த்து அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்கெனவே நடைமுறையில் இருந்தன.

கரோனா தொற்றின் காரணமாக மாணவர்கள் அனுமதிக்கப்படாமல் உள்ளனர். தொற்று குறைந்த பின்னர் மீண்டும் மாணவர்கள் ஐஐடியில் உள்ள ஆய்வகங்கள் மற்றும் படிப்புகள், வசதிகளை அறிந்து கொள்ளும் வகையில் அனுமதிக்கப்படுவார்கள்.

விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டம்

கிராமப்புறங்களில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு ஐஐடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களின் அறிவியல் திறனை பயன்படுத்தும் வகையில், கிராமப்புறங்களில் ஐஐடி சார்பில் பயிற்சி மையங்கள் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம்.

இதனால் கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களின் திறன்கள் வெளிக்கொண்டு வரப்படும். அரசுடன் இணைந்து மாணவர்களுக்கு ஐஐடியில் சேர்வதற்கான பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை ஐஐடி ஆராய்ச்சியின் மூலம் விவசாயக் கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, அதன்மூலம் தயாரிக்கப்படும் பொருட்களை விவசாயப் பயன்பாட்டிற்கு கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்படும்.

ஐஐடியில் சாதியப் பாகுபாடு முற்றுப்புள்ளி

சென்னை ஐஐடியில் சாதியப் பாகுபாடுகள் நிலவாமல் தடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மாணவர்கள் தற்கொலையைத் தடுக்கும் வகையில் இரண்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதன் மூலம் மாணவர்கள் மன அழுத்தம் குறைக்கப்பட்டு, தற்காெலையைத் தடுக்க முடியும்.

மாணவர்கள் விரும்பியப் பாடங்களைப் படிப்பதற்கு பெற்றோர் அனுமதிக்க வேண்டும். மாணவர்கள் மீது தங்களின் விருப்பத்தை திணிக்கக் கூடாது.

மாணவி பாத்திமா லத்தீப் மரணத்தில் விசாரணைக்குத் தேவையான ஒத்துழைப்பு அளிக்கப்பட்டு வருகிறது' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: முப்பதாண்டுகளில் 6 லட்சம் கழிப்பறைகள் - பத்மஸ்ரீ பெற இருக்கும் திருச்சி தாமோதரன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.