ETV Bharat / city

’நீதிமன்றத்திற்கு வெளியே வழக்கு தீர்க்கப்பட்டால் அதை ஊக்குவிக்க வேண்டும்’ - பதிவுத்துறை

சென்னை: நீதிமன்றத்திற்கு வெளியே வழக்கு தீர்க்கப்பட்டால் அதை ஊக்குவிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

highcourt
highcourt
author img

By

Published : Jan 14, 2020, 5:05 PM IST

பணப் பிரச்னை தொடர்பாக சக்தி பைனான்ஸ் நிறுவனத்திற்கு எதிராக எம்.சி. சுப்ரமணியம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த விவகாரத்தில் நீதிமன்றத்திற்கு வெளியில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டதால், வழக்கை திரும்பப்பெற அனுமதி கோரி எம்.சி. சுப்ரமணியம் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வழக்குத் தொடர்பாக செலுத்தப்பட்டக் கட்டணத்தை மனுதாரருக்குத் திரும்ப வழங்க உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட்டது.

அதன்படி பதிவுத்துறையை அணுகி நீதிமன்றக் கட்டணத்தை திரும்பத் தரக்கோரியபோது, வாபஸ் பெறப்பட்ட வழக்கிற்கு கட்டணத்தை திரும்பத்தர விதிகள் ஏதும் இல்லை என வாய்மொழியாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிமன்ற கட்டணத்தை திரும்ப வழங்க உத்தரவிடக்கோரி எம்.சி. சுப்ரமணியம் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், லோக் அதாலத், சமரச தீர்வு மையம் ஆகியவற்றின் மூலம் தீர்வு காணும்போது, நீதிமன்ற கட்டணத்தை முழுமையாக திருப்பியளிக்கும் நிலையில், நீதிமன்றத்திற்கு வெளியில் தீர்வு காணப்பட்ட வழக்குகளுக்கான கட்டணத்தை திரும்ப வழங்க மறுப்பது பாரபட்சமானது எனக் கூறி முழு கட்டணத்தையும் திருப்பி வழங்க உத்தரவிட்டார்.

மேலும், வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நீதிமன்றத்திற்கு வெளியில் பிரச்னைகளுக்குத் தீர்வு காண பல திட்டங்கள் அறிமுகப்படுத்தபட்டுள்ளன என்றும், அவற்றை ஊக்குவிக்க நீதிமன்ற கட்டணங்கள் திரும்பி வழங்கப்பட வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: நிர்பயா வழக்கு: குற்றவாளிகளின் கடைசி நிவாரண மனுக்கள் தள்ளுபடி

Intro:Body:நீதிமன்றத்திற்கு வெளியில் தீர்வு காணப்படும் வழக்குகளை வாபஸ் பெறும்போது, மனுதாரர் செலுத்திய கட்டணத்தை திரும்ப வழங்க வேண்டுமென பதிவுத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பணப் பிரச்சினை தொடர்பாக சக்தி பைனான்ஸ் நிறுவனத்திற்கு எதிராக எம்.சி.சுப்ரமணியம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த விவகாரத்தில் நீதிமன்றத்திற்கு வெளியில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்பட்டதால், வழக்கை திரும்பப்பெற அனுமதி கோரி எம்.சி.சுப்ரமணியம் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை ஏற்று வழக்கை வாபஸ் பெற நீதிமன்றம் அனுமதித்தது. வழக்கு தொடர்பாக செலுத்தப்பட்ட நீதிமன்ற கட்டணத்தை மனுதாரருக்கு திரும்ப வழங்க உயர்நீதிமன்ற பதிவுத் துறைக்கு உத்தரவிட்டது.

அதன்படி பதிவுத்துறையை அணுகி நீதிமன்ற கட்டணத்தை திரும்ப தரக்கோரியபோது, வாபஸ் பெறப்பட்ட வழக்கிற்கு கட்டணத்தை திரும்பத்தர விதிகள் ஏதும் இல்லை என வாய்மொழியாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிமன்ற கட்டணத்தை திரும்ப வழங்க உத்தரவிடக்கோரி எம்.சி.சுப்ரமணியம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், லோக் அதாலத், மத்தியஸ்தம், சமரச தீர்வு மையம் ஆகியவற்றின் மூலம் வழக்கில் தீர்வு காணும்போது, நீதிமன்ற கட்டணத்தை முழுமையாக திருப்பி அளிக்கும் நிலையில், நீதிமன்றத்திற்கு வெளியில் தீர்வுகாணப்பட்ட வழக்குகளுக்கான கட்டணத்தை திரும்ப வழங்க மறுப்பது பாரபட்சமானது என கூறி முழு கட்டணத்தையும் திருப்பி வழங்க உத்தரவிட்டார்.

மேலும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நீதிமன்றத்திற்கு வெளியில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண பல திட்டங்கள் அறிமுகப்படுத்தபட்டுள்ளன என்றும், அவற்றை ஊக்குவிக்க நீதிமன்ற கட்டணங்கள் திரும்பி வழங்கப்பட வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.