ETV Bharat / city

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் கண்டிப்பு - சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: மாமல்லபுரத்தை அழகுபடுத்தி பாதுகாக்கக் கோரிய வழக்கில் ஜனவரி 2 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடுமென சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

court order
court order
author img

By

Published : Dec 12, 2019, 3:13 PM IST

பல்லவ அரசின் சிற்பக்கலைக்கு சாட்சியாக விளங்கும் மாமல்லபுரத்தை நிரந்தரமாக பாதுகாக்கக்கோரி நவம்பர் 1ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதி கிருபாகரன் கடிதம் எழுதியிருந்தார்.

அதில், கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ச்சுனன் தபசு மற்றும் வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்டவற்றில் ’லைட்டிங் ஷோ’ விற்கு ஏற்பாடு செய்ய வேண்டும், புராதான சின்னங்களை மறைக்கும் வகையில் கட்டடங்கள் கட்ட அனுமதிக்கக்கூடாது, குப்பைப் போடுவதை குற்றமாக்கி ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்க வேண்டும், சீன அதிபர் வருகையின் போது அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள் மீண்டும் வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகளை வழங்கியிருந்தார்.

இதையடுத்து, தாமாக முன் வந்து இதனை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சரவணன் அடங்கிய அமர்வு, நீதிபதி கிருபாகரன் அளித்த பரிந்துரைகள் தொடர்பான நடவடிக்கைகள், ஒதுக்கப்பட உள்ள நிதி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் புகைப்பட ஆதாரங்களுடன் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

இந்நிலையில் இன்று, இவ்வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது.

அதனை ஏற்று வழக்கை ஜனவரி 2 ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அன்றைய நாள் மாமல்லபுரம் தொடர்பான விரிவான அறிக்கையை தாக்கல் செய்யாவிட்டால், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: முதலமைச்சரைச் சந்திக்க விவசாயிகள் சென்னை பயணம்

Intro:Body:மாமல்லபுரத்தை அழகுபடுத்தி பாதுகாக்கக் கோரிய வழக்கில் ஜனவரி 2ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரை நேரில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடுமென சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மாமல்லபுரத்தை நிரந்தரமாக பாதுகாக்க கோரி நவம்பர் 1ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதி கிருபாகரன் கடிதம் எழுதியிருந்தார்.

அதில், கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்சுனன் தபசு மற்றும் வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்டவற்றில் லைட்டிங் ஷோ-விற்கு ஏற்பாடு செய்ய வேண்டும், புராதான சின்னங்களை மறைக்கும் வகையில் கட்டிடங்களை அனுமதிக்க கூடாது, குப்பை போடுவதை குற்றமாக்கி குறைந்த பட்சம் ஆயிரம் அபராதம் வசூலிக்க வேண்டும், சீன அதிபர் வருகையின் போது அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள் மீண்டும் முளைக்காமல் பார்த்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகளை வழங்கியிருந்தார்.

அந்த கடிதத்தின் அடிப்படையில் தாமாக முன் வந்து பொது நல வழக்காக விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சரவணன் அடங்கிய அமர்வு, நீதிபதி கிருபாகரன் அளித்த பரிந்துரைகள் தொடர்பான நடவடிக்கைகள், ஒதுக்கப்பட உள்ள நிதி உள்ளிட்ட அனைத்து விவரங்களை புகைப்பட ஆதாரத்துடன் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது.

அதனை ஏற்று வழக்கை ஜனவரி 2ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அன்றைய தினம் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் என அறிவுறுத்தியுள்ளனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.