கடந்த சில ஆண்டுகளாக உலக மாற்றுத்திறனாளிகள் நாளான டிசம்பர் 3ஆம் தேதி, மெரினா கடற்கரையில் சென்னை மாநகராட்சி சார்பில் மரப்பலகையிலான தற்காலிக சாய்தளம் அமைக்கப்பட்டுவருகிறது.
அதேபோல், இந்த ஆண்டும் தசைச் சிதைவு, முதுகுத் தண்டுவடம், கால் வளர்ச்சியின்மை பாதிப்புள்ள மாற்றுத் திறனாளிகள் சக்கர நாற்காலிகளில் சாய்தளம் வழியாக அலைகள் வரும் இடம் வரை சென்று மகிழ்ந்தனர். ஒவ்வொரு ஆண்டும் அந்தச் சாய்தளம் அமைக்கப்பட்டு இரண்டு நாள்களில் அகற்றப்படுகிறது.
இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில், சாய்தளப் பாதையை நிரந்தரப் பாதையாக மாற்றக்கோரி வழக்கறிஞர் கேசவன் என்பவர் தமிழ்நாடு தலைமைச் செயலர், பொதுப்பணித் துறைச் செயலர், சமூக நலத்துறைச் செயலர், சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு டிசம்பர் 4 ஆம் தேதி மனு அனுப்பியிருந்தார்.
அந்த மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கு நீதிபதிகள் என். கிருபாகரன், வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இது குறித்து தமிழ்நாடு அரசும் சென்னை மாநகராட்சியும் ஒரு வாரத்தில் விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகள் இருக்கையில் அமர்ந்ததால் அபராதம்