ETV Bharat / city

அர்ச்சகர்கள் நியமனத்திற்கு எதிரான வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி - சென்னை உயர் நீதிமன்றம்

அறநிலையத்துறை கோயில்களில் அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டுமென உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், நியமனங்கள் தொடர்பான அறிவிப்புகளை எதிர்த்த வழக்குகளை முடித்துவைத்து உத்தரவிட்டுள்ளது.

அர்ச்சகர்கள் நியமனத்திற்கு எதிரான வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி

author img

By

Published : Jun 27, 2022, 8:13 PM IST

தமிழ்நாட்டின் பல்வேறு கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி என். மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன.

அப்போது, தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படியே அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டு வருவதாகவும், அறங்காவலர்கள் உள்ள கோயில்களில் அவர்கள் மூலமாகவே நியமிக்கப்பட்டு வருவதாகவும், அறங்காவலர்கள் இல்லாத கோயில்களில் அறநிலையத்துறையால் நியமிக்கப்பட்ட தரகர்கள் மூலமாக அர்ச்சகர்கள் நியமிக்கப்படுவதாக விளக்கம் அளித்தார்.

இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டுமெனக் கூறி, அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டதை எதிர்த்த வழக்குகளை முடித்துவைத்து உத்தரவிட்டனர். அதேசமயம் அந்த நியமனங்களால் பாதிக்கப்பட்டதாக கருதும் நபர்கள் தனிப்பட்ட முறையில் வழக்குத்தொடரலாம் என அறிவுறுத்தினர்.

அர்ச்சகர்கள் நியமிக்கப்பின்பற்றப்படும் விதிகளை எதிர்த்த வழக்குகளை அடுத்தகட்ட விசாரணைக்காக நீதிபதிகள் தள்ளிவைத்துள்ளனர்.

இதையும் படிங்க: 'ஓபிஎஸ் சாதியை ஆயுதமாக பயன்படுத்துவது சரியல்ல' - அதிமுக முன்னாள் எம்.பி., ப.குமார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.