ETV Bharat / city

நீட் தேர்வில் விலக்கு அளிக்க கோரி வலியுறுத்த முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் - மத்திய அரசு

சென்னை: நீட் தேர்வில் விலக்கு அளிக்க கோரிய மசோதாவில் நடவடிக்கை எடுக்கும் படி உத்தரவு பிறப்பிக்க முடியாது என கூறி சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
author img

By

Published : Aug 13, 2019, 7:06 PM IST

தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விலக்கு அளித்து சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடுஅரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின் போது மத்திய அரசு சார்பில் , குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்ட இரு மசோதாக்களும் திருப்பி அனுப்பப்பட்டு விட்டதாகவும், அதை தமிழ்நாடு அரசு பெற்றுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து இந்த விஷயத்தை சட்டமன்றத்தில் கூட தெரிவிக்காதது ஏன்? என விளக்கமளிக்கும் படி தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு கடந்த விசாரணையில் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள், இந்த வழக்கை பொறுத்தவரை மத்திய அரசு ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கிறது. அதனால் ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கும் படி உத்தரவு பிறப்பிக்க முடியாது என கூறினர். மேலும் மசோதாவை திருப்பி அனுப்பிய விவகாரத்தில் நடைமுறை பின்பற்றவில்லை என்றால், தனி வழக்காக மட்டுமே தாக்கல் செய்ய முடியும் என அறிவுறுத்தினர்.

அதனால் இந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

இதைதொடர்ந்து தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் தகவல் தெரிவிக்கப்பட்டு, நீண்ட விவாதமும் நடத்தப்பட்டது. மசோதாக்களை திருப்பி அனுப்பியதற்கான காரணங்களை தெரிவிக்கும் படி மத்திய அரசுக்கு 2017அக்டோபர் 25ஆம் தேதி முதல் கடந்த மே 5ஆம் தேதி வரை 11 கடிதங்கள் மாநில அரசு சார்பில் அனுப்பி இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து நீட் மசோதா குறித்த வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Intro:nullBody:நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்ககோரிய மசோதா நிராகரிக்கப்பட்டது குறித்து சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, விவாதமும் நடத்தப்பட்டத்தாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளித்து சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின் போது, இரு மசோதாக்களும் திருப்பி அனுப்பப்பட்டு விட்டதாகவும், அதை தமிழக அரசு பெற்றுக் கொண்டதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த விஷயத்தை சட்டமன்றத்தில் கூட தெரிவிக்காதது ஏன் என விளக்கமளிக்கும் படி தமிழக அரசுக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு கடந்த விசாரணையில் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கை பொறுத்தவரை மத்திய அரசு ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கிறது. அதனால் ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கும் படி உத்தரவு பிறப்பிக்க முடியாது என கூறிய நீதிபதிகள், மசோதாவை திருப்பி அனுப்பிய விவகாரத்தில் நடைமுறை பின்பற்றவில்லை என்றால் தனி வழக்காக மட்டுமே தாக்கல் செய்ய முடியும் என அறிவுறுத்தினர்.

எந்த காரணங்களும் தெரிவிக்காமல், மசோதாக்கள் திருப்பி அனுப்பிப்பட்டதால், நடைமுறை நிறைவடையவில்லை என கருத வேண்டியுள்ளது. அதனால் இந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், இந்த விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு, நீண்ட விவாதமும் நடத்தப்பட்டது.

மசோதாக்களை திருப்பி அனுப்பியதற்கான காரணங்களை தெரிவிக்கும் படி மத்திய அரசுக்கு 2017 அக்டோபர் 25ம் தேதி முதல் கடந்த மே 5 ம் தேதி வரை 11 கடிதங்கள் தமிழக அரசு அனுப்பி இருப்பதாக தெரிவித்தார்.

இதையடுத்து நீட் மசோதா குறித்த வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.