சென்னை: சென்னையில் புதியதாக சைக்கிள் ஓட்டும் பாதை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சைக்கிளிங் மற்றும் ப்ரோ பைக்கர்ஸ் அமைப்பும் இந்த ஓடுபாதைக்கு தனது பங்கினை அளித்துள்ளது.
இந்த மிதிவண்டி சவாரி சென்னையில் அமைந்துள்ள தீவுத்திடலில் சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநருமான சந்தீப் நந்தூரி, லெப்டினல் ஜெனரல் அருண் ஆகியோரால் தொடங்கிவைக்கப்பட்டது.
சென்னையில் உள்ள போர்த்துகீசியர்களின் தடயங்கள் பற்றி மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், சாந்தோம் பசிலிக்கா, புனித ரீத்தம்மாள் வரலாறு (சாந்தோம்), தியான ஆசிரமம் (ஃபோர்ஷோர் எஸ்டேட்), போர்த்துகீசிய சர்ச் ஸ்ட்ரீட் உள்ளிட்ட இடங்களை உள்ளடக்கியவாறு இந்த பாதை அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையின் பராம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை எடுத்துரைக்கும் வகையிலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்காக மிதிவண்டி ஓட்டுவதை ஊக்குவிக்கும் நோக்கிலும் இந்த பாதை அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநருமான சந்தீப் நந்தூரி, லெப்டினல் ஜெனரல் அருண் ஆகியோர் இந்த சைக்கிள் பாதையில் சைக்கிள் சவாரியை தொடங்கி வைத்தனர். இந்த முயற்சி, சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், சுற்றுலாவை மேம்படுத்தவும் பயன்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்