ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 31ஆம் தேதியான திங்கட்கிழமை சென்னை மாவட்டத்திற்கு விடுமுறை என சென்னை ஆட்சியர் சீத்தாலட்சுமி அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது;
"ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி சென்னை மாவட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஆணைப்படி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. மேற்படி உள்ளூர் விடுமுறைக்கு பதில் செப்டம்பர் 12ஆம் தேதியான சனிக்கிழமை அன்று சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. மேலும், உள்ளூர் விடுமுறை நாளான ஆகஸ்ட் 31ஆம் தேதியன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள கருவூலம், சார்நிலை கருவூலகங்கள் குறிப்பிட்ட பணியாளர்களைக் கொண்டு செயல்படும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.