Chennai Corporation: சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு கரோனா தொற்று அறிகுறி உள்ளதா என்ற தகவலை இந்த gccpvthospitalreports@chennaicorporation.gov.in மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தனியார் மருத்துவமனைகள், சிகிச்சை மையங்கள் மற்றும் பொது மருத்துவம் செய்யும் மருத்துவர்களுடன் ஒருங்கிணைந்து தகவல்களைப் பெற மாநகராட்சியின் சார்பில், பூச்சியியல் வல்லுநர்களைக் கொண்ட 15 ஒருங்கிணைப்பு அலுவலர்கள் ஏற்கெனவே மாநகராட்சியால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தனியார் மருத்துவமனைகள், சிகிச்சை மையங்கள் மற்றும் பொது மருத்துவம் செய்யும் மருத்துவர்கள், கரோனா தொற்று அறிகுறியுள்ள நபர்களின் விவரங்களை மாநகராட்சிக்குத் தெரிவிக்கத் தவறினால், பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005 பிரிவு 51இன் படி, சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'துணைவேந்தராக சூரப்பா இருந்தபோது முறைகேடு... ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும்'