ETV Bharat / city

மெரினா கடற்கரை கடைகளின் வாடகை விவரத்தை தெரிவித்த மாநகராட்சி - சென்னை மாநகராட்சி

சென்னை: மெரினா கடற்கரையில் புதிதாக அமைக்கப்பட உள்ள 900 கடைகளுக்கு மாதத்துக்கு ரூ. 1,200 வீதம் வாடகை வசூலிக்க முடிவெடுத்துள்ளதாக சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rent to be collected for shops in marina beach
Marina beach in chennai
author img

By

Published : Feb 5, 2020, 9:37 AM IST

மெரினா கடற்கரைப் பகுதியில் மீன் வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவது, நடைபாதை வியாபாரிகள் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

ஏற்கனவே இந்த வழக்குகளில், சென்னை மாநகராட்சி ஆணையர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 27.04 கோடி ரூபாய் செலவில், 900 தள்ளுவண்டி கடைகளை மாநகராட்சியே அமைத்து கொடுக்க இருப்பதாகவும், கலங்கரை விளக்கம் அருகில் ரூ. 66 லட்சம் செலவில் 300 தற்காலிக மீன் விற்பனை கடைகள் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் வினித் கோத்தாரி, சுரேஷ் குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சென்னை மாநகராட்சி சார்பில் ஆஜரான தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் எஸ்.ஆர் ராஜகோபால்,
கடைகள் கொள்முதலுக்கான டெண்டர் அறிவிப்பானை இன்று (பிப்ரவரி 5ஆம் தேதி) அரசிதழில் வெளியிடப்பட உள்ளது எனத் தெரிவித்தார்.

மார்ச் மாத இறுதிக்குள் டெண்டர் இறுதி செய்யப்பட்டு, பின்னர் மாதம்தோறும் 300 கடைகள் வீதம் மூன்று மாதத்துக்குள் 900 கடைகளை கொள்முதல் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த 900 கடைகளை பொறுத்தவரை உரிமக் கட்டணமாக மோட்டார் பயன்படுத்தும் கடைகளுக்கு ஆண்டுக்கு 3000 ரூபாயும், மோட்டார் பயன்படுத்தாத கடைகளுக்கு 1,500 ரூபாயும் வசூலிக்கப்பட உள்ளது. பராமரிப்பு செலவோடு சேர்த்து வாடகை கட்டணமாக மாதத்துக்கு 1,200 ரூபாய் வசூலிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இதையடுத்து மாநகராட்சி அடையாள அட்டை வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே கடைகள் ஒதுக்கப்பட வேண்டும் எனவும், அடையாள அட்டை வாங்காமல் விடுபட்டவர்கள் மாநகராட்சியிடம் உடனடியாக விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவுறுத்திய நீதிபதிகள், தகுதியானவர்களுக்கு அடையாளஅட்டை வழங்கும் பணியை மார்ச் 15ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

அத்துடன், டெண்டர் அறிவிப்பாணை தொடர்பான விவரங்களையும், கலங்கரை விளக்கம் முதல் பட்டினம்பாக்கம் வரையான சாலையில் நடைபாதை அமைப்பதற்கான அளவீடு விவரங்களையும் தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை பிப்ரவரி 6ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Intro:Body:மெரினா கடற்கரையில் புதிதாக அமைக்கப்பட உள்ள 900 கடைகளுக்கு மாதத்துக்கு 1,200 வீதம் வாடகை வசூலிக்க முடிவெடுத்துள்ளதாக சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரை பகுதியில் மீன் வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவது, நடைபாதை வியாபாரிகள் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

ஏற்கனவே இந்த வழக்கில், சென்னை மாநகராட்சி ஆணையர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 27.04 கோடி ரூபாய் செலவில் , 900 தள்ளுவண்டி கடைகளை மாநகராட்சியே அமைத்து கொடுக்க இருப்பதாகவும், களங்கரை விளக்கம் அருகில் ரூபாய் 66லட்சம் செலவில் 300 தற்காலிக மீன் விற்பனை கடைகள் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் வினித் கோத்தாரி, சுரேஷ் குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது,
சென்னை மாநகராட்சி சார்பில் ஆஜரான தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் எஸ்.ஆர் ராஜகோபால்,
கடைகள் கொள்முதலுக்கான டெண்டர் அறிவிப்பானை
பிப்ரவரி 5ம் தேதி அரசிதழில் வெளியிட உள்ளதாகவும், மார்ச் மாத இறுதிக்குள் டெண்டர் இறுதி செய்யப்பட்ட உள்ளதாகவும், டெண்டர் இறுதி செய்யப்பட்ட பின்னர் மாதம்தோறும் 300 கடைகள் வீதம் மூன்று மாதத்திற்குள் 900 கடைகளை கொள்முதல் செய்ய முடிவெடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த 900 கடைகளை பொறுத்தவரை உரிமக் கட்டணமாக மோட்டார் பயன்படுத்தும் கடைகளுக்கு ஆண்டுக்கு 3000 ரூபாயும், மோட்டார் பயன்படுத்தாத கடைகளுக்கு 1,500 ரூபாயும் வசூலிக்க உள்ளதாகவும், பராமரிப்பு செலவோடு சேர்த்து வாடகை கட்டணமாக மாதத்துக்கு 1,200 ரூபாய் வசூலிக்க முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மாநகராட்சி அடையாள அட்டை வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே கடைகள் ஒதுக்கப்பட வேண்டும் எனவும், அடையாளஅட்டை வாங்காமல் விடுபட்டவர்கள் மாநகராட்சியிடம் உடனடியாக விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவுறுத்திய நீதிபதிகள், தகுதியானவர்களுக்கு அடையாளஅட்டை வழங்கும் பணியை மார்ச் 15-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

டெண்டர் அறிவிப்பாணை தொடர்பான விவரங்களையும், களங்கரை விளக்கம் முதல் பட்டினம்பாக்கம் வரையான சாலையில் நடைபாதை அமைப்பதற்கான அளவீடு விவரங்களையும் தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை பிப்ரவரி 6ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.